இது தெரியுமா ? செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால்...
நவீனமாய் மாறிப்போய்விட்ட உலகில் அலுமினியம், சில்வர், மைக்ரோஓவன் போன்றவற்றில் மக்கள் மூழ்கிவிட்டார்கள். ஆனால், இவற்றில் சமைத்து உண்ணும் உணவினை விட மண்பானை சமையல் உடலிற்கு ஆரோக்கியத்தை வழங்கும். இதனால் தான் அந்த காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் அதிக வயது உயிர் வாழ்ந்தனர்.
மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது. மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண்பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகக் கூடிய தரமான உணவு கிடைக்கிறது. மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை.
உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது. மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாகும்.
மண்பானையின் மகிமை
மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.
மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.
தங்க பாத்திரம்
தங்க பாத்திரத்தில் சமையல் செய்தால் அல்லது தண்ணிர் கொதிக்க வைத்து குடித்தால் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற நுரையீரல் நோய்கள், இதய நோய்கள்,மூளை சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும், உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு அடையும். பண்டைய மக்கள் சுகாதாரம் மற்றும் அழகிற்கு பயன்படுத்தி அதன் பலனை உணர்ந்திருந்தார்கள்.
வெள்ளிப் பாத்திரம்
அறிவியல் ஆய்வின்படி, வெள்ளியில் நோய்களை உண்டாகக்கூடிய 650 நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை உள்ளது. மேலும் ஒரு லிட்டர் தண்ணீரைச் சுத்தஞ்செய்ய 0.1 கிராம் வெள்ளியே போதுமானது. பாலை வெள்ளிப் பாத்திரத்தில் அருந்துவதால் பாலின் மூலம் பரவும் நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன. நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்ட வெள்ளி பாத்திரங்களை உபயோகித்து நோயிலிருந்து விடுபடலாம். வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலை அடையும்.
இன்றைய காலகட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பாத்திரம் சாத்தியம் இல்லை, அதன் பலனை அடைய ௦.1 கிராம் தங்கம், வெள்ளியை (கிராம் கணக்கு மக்கள் வசதிக்கு ஏற்ற விருப்பம்) நீரில் போட்டு கொதிக்கவைத்து அருந்தலாம்.
செம்புப் பாத்திரம்
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. சித்தர்களும், முனிவர்களும் பயன்படுத்தி வந்த கமண்டலங்கள் செம்பினால் ஆனவை என்பது குறிப்பிடத்தது. இயற்கையாகவே செம்பினாலான பாத்திரங்களில் நீர் வைத்திருந்தால், நீரிலுள்ள தீய நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால் இரத்தத்திலுள்ள பித்த நோய்கள், வயிற்று கோளாறுகள், கபம், மந்தம், வெண்மேகம், அலர்ஜி, சூதக நோய், புண், மனநிலை கோளாறுகள், கிருமி தொற்று, கண் நோய் ஆகியவை நீங்கிவிடும்.
பித்தளை பாத்திரம்
பித்தளை பாத்திரத்தில் சமைத்த உணவு வயிற்று பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு
எஃகு பாத்திரம்
எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.
இரும்புப் பாத்திரம்
இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் இரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை இரும்பு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.
ஈயச் சொம்பு
ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.
வெண்கலப் பாத்திரம்
வெண்கலப் பாத்திரத்தில் சமையல் செய்து வைத்தல் உணவு விரைவில் கெட்டு போகாமல் இருக்கும்.
இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். பாத்திங்களை பயன்படுத்தியவுடன் பலன் தெரியாது, ஆனால் பயன்படுத்த படுத்த மாற்றத்தை உணரலாம்.