1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினமும் காலையில் கண் விழித்ததும் திராட்சைப்பழ குடித்து வந்தால்..

1

அல்சர், அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து.தினமும் காலையில் கண் விழித்ததும் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வாருங்கள்... வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும். இதேபோல், தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை வெறுமனே பழமாகவோ, ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

பொதுவாக பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் மலச்சிக்கலை சரிசெய்ய திராட்சை நல்ல மருந்தாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் மறுநாள் காலை அதன் பலன் தெரியும்.

இதே பிரச்சனை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு காலையில் கண்விழித்ததும் அதை நசுக்கி அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தாலே பிரச்சனை சரியாகிவிடும். கர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அந்தமாதிரி நேரங்களில் திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அந்தமாதிரி நேரங்களில் திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். எடை குறைவாக இருக்கிறவர்கள், உடம்பில் சூடு அதிகம் உள்ளவர்களும் திராட்சையை சாப்பிட்டு பலனடையலாம்.உடம்புல சூடு அதிகம் உள்ளவங்களும் கண்ணை மூடிக்கிட்டு திராட்சையை சாப்பிடுங்க.

திராட்சை பழச்சாறு, சூரிய வெப்பத்திலிருந்து தாக்கக் சூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் கதிர்களிடமிருந்தும், வெப்பத்தால் வரும் கட்டிகளிலிருந்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டது. இது இயற்கையாகவே சருமப் பிரச்சினைகளை வர விடாமல் தடுக்கும் சக்தி கொண்டது. பொதுவாக, வெயில் காலத்தில் தினமும் ஒரு குவளை திராட்சை சாறு அருந்துவது சிறந்தது.

திராட்சை சாற்றை சருமத்தில் தேய்த்து வந்தால், அதில் உள்ள இறந்த திசுக்கள் நீங்கி, சுருக்கங்கள் அற்று இயற்கையாக காணப்படும். நல்ல ரத்த ஓட்டத்தால், சருமத்தின் பளபளப்பு தன்மையும் அதிகரிக்கிறது. திராட்சை சாறு, சருமத்துக்கான ஈரப்பதத்தை இயற்கையாகவே கொடுக்கிறது.

Trending News

Latest News

You May Like