இது தெரியுமா ? இஞ்சியை தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பானமாக குடித்து வந்தால்...

இஞ்சியை தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு சுவையான பானமாக அருந்த முடியும். இவ்வாறு இஞ்சியை ஒரு பானமாக அருந்துவதால் உடலுக்கு பலவகையான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
பானம் எப்படி தயாரிப்பது?
ஒரு டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி எடுத்துக்கொள்ளவும். ஓர் சிறிய இஞ்சித் துண்டை மேலும் சிறு துண்டுகளாக நசுக்கி பாத்திரத்தினுள் இட்டு அதை நீருடன் சற்று கலக்கிவிட்ட பின்னர், அடுப்பில் கொதிக்கவைக்க வேண்டும்.
பாத்திரத்தில் உள்ள நீர் கொதித்தவுடன் அதனை வடித்து எடுத்துக்கொள்ளவும். அதனுள் ஒரு பாதி எலுமிச்சை சாற்றை பிழிந்துகொள்ளவும். அதில் போதிய அளவு தேன் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது, பணம் தயாராகிவிட்டது.
இதனை ஒரு வாரம் தொடர்ந்து அருந்திவர வேண்டும். இதை ஒருவர் அரை டம்ளர் அளவில் அருந்தி வந்தாலே போதுமானது.
இதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
உணவில் நாட்டம் இல்லாமல் பசியின்மை பிரச்சினை உள்ளவர்களுக்கு பசியின்மை நீங்கி நன்றாக பசியெடுக்கும்.
நுரையீரலில் தேங்கிக் கிடைக்கும் சளியை வெளியேற்றும். நுரையீரலில் உள்ள நாள்பட்ட சளியையும் கூட வெளியேற்றி விடும்.
செரிமானப் பிரச்சினைகளை தீர்க்க உதவும்.
இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவும்.
ஆண்களுக்கு விதைப்பை புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.
மூளையின் ஆரோக்கியத்தை பேண உதவும்.
சைனஸ் பிரச்சினையால் ஏற்படும் தலைவலியை இல்லாமல் செய்யும்.
பயணங்களின் போது ஏற்படும் கும்மட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படாது.
மூட்டு வலியை குறைக்க உதவும்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த பானம். சுவாசப் பிரச்சினைகளை குறைக்கும்.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்பை கரைக்க வல்லது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
வாய் துர்நாற்றத்தை இல்லாமல் செய்யும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.