1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினமும் முட்டைக்கோஸ் வேகவைத்த நீரை குடித்து வந்தால்...

1

முட்டைகோஸ் சமைக்கும் போது அதன் வாசனை அதிகமாக வராமல் இருக்க அதனை வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டிய பிறகுதான் சமைப்போம். இனி அந்த தவறை செய்யாதீர்கள். ஏனென்றால் முட்டைக் கோஸ் வேகவைத்த நீரை குடிப்பதால் உடலுக்கு பலவித அற்புத நன்மைகள் இருக்கின்றன. 

இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதே ஆகும். முட்டை கோஸ் ஜூஸில் குறைவான கலோரியே உள்ளதால் உடலில் அதிகபடியாக கொழுப்பும் சேராது. இதனை குடிப்பதால் உள்ளுருப்புகளில் படிந்திருக்கும் டாக்ஸின்களை அழித்து எளிதாக உடல் எடையை குறைக்க உதவும்.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். விஷத்தன்மை அதிகம் உண்டாகியிருக்கும். முட்டைகோசுக்கு விஷத்தன்மையை நீக்கும் ஆற்றல் அதிகம் உண்டு. அதனால் வாரத்தில் இரண்டு நாட்களாவது குறைந்தது முட்டைகோஸ் வேகவைத்த நீரைக் குடித்து வந்தால் கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சினைகள் நீங்கும். அதோடு அதிக மதுப்பழக்கத்தால் வயிற்றில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றக்கூடியது.

அல்சர் உள்ளவர்கள் முட்டைகோஸ் தண்ணீர் பருகி வருவதினால் விரைவில் குணமடைய முடியும். ஏனெனில் முட்டைகோஸில் இருக்கும் விட்டமின் சி வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை குணப்படுத்தக்கூடியது.முட்டைகோஸ் வேகவைத்த நீரை தினமும் மதியம் சாப்பிடும் முன் 150 மில்லி அளவு வரை குடித்து வர அல்சர் புண்கள் விரைவில் ஆறும்.

புற்றுநோயால் பதிக்கபட்டவர்களுக்கு முட்டைகோஸ் ஜூஸ் மிகவும் நன்மையை தருகின்றன. இதற்கு காரணம் முட்டைகோஸ் ஜூஸில் அதிகப்படியான ஐசோசியனேட் இருப்பதால் இவை நுரையிரல்,வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுக்கின்றன.

சருமத்தில் ஏற்படக்கூடிய பரு, கரும்புள்ளி, பருக்கள் போன்றவைகளே. இத்தகைய சரும பிரச்சனைகளுக்கு முட்டைகோஸ் ஜூஸ் நல்ல பலனை தருகின்றது. தினமும் முட்டைகோஸ் நீரை குடிப்பதோடு அதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி, அரைமணி நேரம் கழித்து கழுவி வர சருமம் பொலிவாக இருக்கும். அதோடு முகத்தில் இருக்கும் கரும்புள்ளி மற்றும் முகப்பருக்கள் மறையும்.

முட்டைகோஸ் ஜூஸ் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்து இருப்பதால் இவற்றை தொடர்ந்து குடித்து வருவதால் சரும ஆரோக்கியத்தை பராமரித்து சரும பிரச்சனைகளில் இருந்து முழுமையாக தீர்வு பெறலாம்.வயதான தோற்றம் வருவதை தடுத்து, இளமையாக இருக்க பல வழிகளை பின்பற்றி வருகின்றனர். அவர்கள் என்றும் இளமையுடன் இருக்க முட்டைகோஸ் ஜூஸ் பெரிதும் உதவும்.

பொதுவாக கூந்தல் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படுகிற ஊட்டச்சத்து புரதம் தான். முட்டைகோஸ் வேகவைத்த நீரில் கூந்தலுக்குத் தேவையான புரதம் மற்றும் கோலாஜன் அதிக அளவில் இருக்கிறது. முடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை வெளிப்புறத்தில் மட்டும் கொடுப்பதைவிட, உள்ளுக்குள்ளே சாப்பிடுவதும் முக்கியம். அதனால் அடிக்கடி முட்டைகோஸ் வேகவைத்த தண்ணீரை குடித்து வருவதன் மூலம் வந்தால் கூந்தலுக்கு இயற்கையான போஷாக்கும் கிடைக்கும். அதோடு தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து குளித்து வருவதால் முடி அடர்த்தியாக வளரும்.

பல்வலி, பல் வீக்கம், பல் சொத்தை போன்றவையும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சினையும் உள்ளவர்கள் முட்டைகோஸ் வேகவைத்த நீரைக் கொண்டுவாயில் ஒரு நிமிடம் வரை வைத்திருந்து கொப்பளித்து வந்தால் பல் மற்றும் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். அதேபோல் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த முட்டைகோஸ் வேகவைத்த நீரை குடித்தும் வரலாம்.

முட்டைக்கோஸ் அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறி என்பது நமக்குத் தெரியும். அதோடு வைட்டமின்களும் தாதுப் பொருள்களும் அதிகம். முட்டைகோஸில் அதிக அளவில் விட்டமின் கே இருப்பதால் இது எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்ற பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்கும். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானப் பிரச்சினையை தள்ளிப் போடும்.

நரம்புகளின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க முட்டைகோஸ் உதவுகிறது. அதனால் அடிக்கடி முட்டைகோஸ் வேகவைத்த நீரை வீணாக்காமல் குடித்து வந்தால் கண் பார்வை நரம்புகள் சீராகச் செயல்படும்.கண் பார்வை தெளிவாகும். கண் பார்வை மங்கலாக இருப்பவர்களுக்குக் கூட விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

கண் பார்வைக் கோளாறுகள் குணமாகும்.

Trending News

Latest News

You May Like