1. Home
 2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? சீரான முறையில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால்...

1

பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை, கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கின்றனர். 

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை சிறப்பாக செயல்படுவதற்கு பாகற்காயானது உதவுகிறது. பாகற்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் நீக்கபடுகிறது.

சிறு நீரகத்தில் உள்ள கற்களை கரைப்பதற்கும் உதவுகின்றது. பாகற்காயானது உடலின் செரிமான மண்டலத்தை நன்றாக தூண்டுகிறது. இதனால் உணவு நன்றாக செரிமானம் ஆகின்றது.

கல்லீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமடைகிறது. பாகற்காய் ஆஸ்துமா, இருமல் போன்றவற்றை தீர்ப்பதில் மிகச் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

 • பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும். பாகற்காயை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். 
 • பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால், அது அவர்களுக்கு சிறந்த மருந்து. 
 • ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும், பாகற்காயை உண்ணலாம். இப்பிரச்னைகள் இருப்பவர்கள் மட்டும்தான், பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்னைகள் வர வேண்டாம் என்று நினைப்பவர்களும் சாப்பிடலாம். 
 • பாகற்காயின் இலைகளை அரைத்து, உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும். இதேபோல பாகற்சாறும், உடலுக்கு மிகவும் ஏற்றது. 
 • பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். தாய்ப்பால் சுரக்க உதவும். 
 • ஒரு பிடி கொடிப்பாகல் இலையுடன், ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து, கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை, பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். 
 • பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து, வாந்தி எடுத்தால், அத்துடன் பாம்பு கடித்த விஷம் நீங்கும். உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகும்; தோல் பளபளப்பாகும். 
 • சீரான முறையில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும். எனவே பசியும் அதிகரிக்கும். கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பாகற்காயில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
 • 3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய்ஜுஸ்கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராதாம்.
 • தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்துசாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய்சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

எப்படி வாங்குவது?:
பச்சையாக, தொட்டுப் பார்க்க கெட்டியாக, உள்ளே விதைகள் பிஞ்சாகஇருந்தால் சமையலுக்கு நல்லது. மஞ்சள் தோல் இருக்கக் கூடாது. பாகற்காயை 2 நாள் வரை ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம். அதற்கு மேல் வைத்தால்மஞ்சளாகும். அவ்வப்போது வாங்கி சமைப்பதுதான் நல்லது.

சமைப்பது:
பாகற்காய்க்கு அதன் கசப்பு தான் பலம், பலவீனம் இரண்டுமே. கசப்பைக் கொஞ்சம்குறைக்க வேண்டுமானால் மேலேயுள்ள கரடுமுரடான முள்ளைச் சீவிவிடலாம். காயைநீளவாட்டத்தில்வெட்டி விதைகளை நீக்கிவிட்டு உப்பு போட்டு பிசறி வைத்து உபயோகித்தால் கசப்பு குறையும்.சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு சமைத்தாலும் கசப்பு குறைந்து ருசியாக இருக்கும்.பாகற்காயை வேகவைத்து, வதக்கி, பொரித்து, குழம்பாக, உருளைக்கிழங்கில் அடைத்து என்று பலவகையிலும் சமைக்கலாம். வற்றல் போட்டும் சாப்பிடலாம்.

Trending News

Latest News

You May Like