இது தெரியுமா ? பீட்ருட் கிழங்கின் சாற்றுடன், சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால்...
1) வயிற்று வலி : வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
2) வாயு தொல்லை : வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
3) தொடர் விக்கல் : நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
4) தாய்ப்பால் சுரக்க : அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
5) சீதபேதி : சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
6) நினைவாற்றல் : வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
7) சரும நோய் : கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
8) தொண்டை கரகரப்பு : சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
9) மூக்கடைப்பு : ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10) பற் கூச்சம் : புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
11)நூறு மில்லி பசுவின் பாலில் அதே அளவு தண்ணீர் விட்டு, வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்ச வேண்டும். பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியை கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
12)புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
13) பீட்ருட் கிழங்கின் சாற்றுடன், சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
14) கர்ப்பிணிகள் கேரட் சாறும் தேனும் கலந்து பருகி வந்தால், வாந்தி நிற்கும்; உடல் வலுவாகும்.பித்த நோய்கள் தீரும்.
15) முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து, பாகம் செய்து சாப்பிட்டால் தளர்ச்சி விலகும்.
16)வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியும் உண்டாகும்.
17)நெருப்பு, சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும்; கொப்பளமும் ஏற்படாது.
18) சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.
19)கறிவேப்பிலையை அம்மியில் வைத்து, அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்து விட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.