1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இப்படி சமைத்தால் தான் முழு சத்து கிடைக்கும்..!

1

காய்கறிகளை நறுக்கியதற்கு பிறகு கழுவ கூடாது என்பதும் நறுக்கியதற்கு முன்பே கழுவி விட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீர்சத்து மிகுந்த காய்கறிகலை ஐந்து நிமிடங்கள் மற்றும் வேக வைத்தால் போதுமானது

காய்கறிகள் தற்போது ரசாயன உரங்களால் விளைவிக்கப்படுவதால் காய்கறிகளை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் அதன் தோலில் உள்ள பூச்சி மருந்துகளின் தாக்கம் விலகும் என்பது குறிப்பிடத்தக்கது 

அதேபோல் காய்கறிகளை எண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் அதன் முழு சத்து கிடைக்காது. முட்டைக்கோஸ் தேங்காய் வெள்ளரிக்காய் தக்காளி கேரட் இவற்றை சமைக்காமல் பயன்படுத்தினால் அதிக சத்துக்கள் கிடைக்கும்

சமைக்க வேண்டிய காய்கறிகளை தேவையான அளவு தண்ணீரில் வேக வைத்து அதன் பின் அந்த தண்ணீரை வீணாக்காமல் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது 

பாகற்காய்: பாகற்காயை பெரும்பாலும் உணவில் சேர்ப்பதை பலரும் தவிர்த்து வருகின்றனர். ஆனால் இந்த பாகற்காயில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் பல இருக்கின்றன. பாகற்காயை நாம் வாங்கும் பொழுது அது உப்பி பெரியதாக இருந்தால் அவற்றை வாங்குவதை தவிர்த்து விடவேண்டும். தட்டையாக இருக்கும் பாகற்காயை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றை சமைத்தால் மட்டுமே சுவை நன்றாக இருக்கும்.

உருளைக்கிழங்கு: அனைவர் வீட்டிலும் உருளைக்கிழங்கு பதார்த்தம் என்றால் மிகவும் பிடித்து சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கை வாங்கும் பொழுது விரலால் அதன் மேல் தோலை கீறி பார்த்து வாங்க வேண்டும். அப்படி கீறும்பொழுது அதன் தோல் உரிந்தால் அது நல்ல உருளைக்கிழங்காக இருக்கும். ஆனால் அதன் தோல் உரியவில்லை என்றால் அவற்றை வாங்க கூடாது.

கோவைக்காய்: கோவைக்காய் வாங்கும் பொழுது அதன் நிறத்தை கவனமாக கவனிக்க வேண்டும். கோவைக்காயின் நிறம் முழுவதும் பச்சையாக இருக்க வேண்டும். அப்படி பச்சையாக இருந்தால் அது சமைப்பதற்கு நன்றாக இருக்கும். அவ்வாறு பச்சை நிறத்தில் இல்லாமல் அதன் மேற்புறத்தில் சிவப்பு வண்ணத் திட்டுகள் இருந்தால் அவற்றை வாங்குவதை தவிர்த்து விடலாம்.

முருங்கைக்காய்: முருங்கைக்காயை வாங்கும் முன்னர் அதனை கையில் எடுத்து லேசாக முறுக்கி பார்க்க வேண்டும். அப்படி செய்யும் பொழுது முருங்கைக்காய் வளைந்தது என்றால் அது சமைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். அவ்வாறு வளையாமல் விரைப்பாக இருந்தது என்றால் முருங்கைக்காய் முற்றிவிட்டதாக இருக்கும்.

சேனைக்கிழங்கு: சேனைக்கிழங்கை வாங்கும் முன்னர் பெரிய அளவில் இருப்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதனை இரண்டாக வெட்டிப் பார்த்து அதன் உள்பகுதி செம்பழுப்பு நிறத்தில் இருந்தால் அதனை தாராளமாக வாங்கிக்கொள்ளலாம்.

கத்தரிக்காய்: பெரும்பாலும் வீட்டில் சாம்பார் என்றாலே அதில் கத்தரிக்காய் தான் அதிக அதிகளவில் சேர்ப்பார்கள். கத்தரிக்காய் வாங்கும் பொழுது அதனை கையில் எடுத்து அழுத்திப் பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது அது மிருதுவாக இருந்தால் அது இளசான நல்ல கத்தரிக்காயாகும். அவ்வாறு இல்லாமல் அழுத்தமாக இருந்ததென்றால் அவை முற்றிய கத்தரிக்காய். அதனை வாங்கி சமைத்தால் உங்கள் சமையலின் சுவையையே கெடுத்து விடும்.

வெங்காயம்: வெங்காயத்தை வாங்கும் பொழுது எப்பொழுதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதன் மேற்புறம் ஈரமாக இருந்ததென்றால் அதனை வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது. அதேபோல் வெங்காயத்தின் நிறம் சற்று அடர்த்தியாக இருந்தால் அது நல்ல காரம் மிகுதியான வெங்காயமாக இருக்கும்.

Trending News

Latest News

You May Like