இது தெரியுமா ? ஆட்டின் இதயத்தை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால்...
சிலர் மட்டன், சிக்கன் சாப்பிட்டுவிட்டு, நிறைய சுடுதண்ணீரை குடிப்பார்கள்.. இப்படி வெந்நீர் குடித்தால், அசைவ பொருட்களில் உள்ள கொலஸ்ட்ரால் கரைந்துவிடும் என்று நினைக்கிறார்கள்.. அது தவறு.. அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு, சுடுதண்ணீர் குடித்தால், கொழுப்பு கரையும் என்று நினைத்து கொள்ளவே கூடாது.. சுடுதண்ணீர் எவ்வளவு குடித்தாலும், கொழுப்பு,+ கொலஸ்ட்ராலை துளியும் குறைக்காது.. வேண்டுமானால் உங்கள் வயிற்றை சுத்தப்படுத்தி கொள்ள சுடுதண்ணீர் உபயோகப்படுமே தவிர, கொழுப்பை கரைக்க உதவாது.
நாம் 2 வகையான மட்டனை சாப்பிடுகிறோம்...செம்மறி ஆட்டுக்கறி + வெள்ளாட்டுக்கறி என்று இரண்டு வகையான மட்டன்களை சமைத்து உண்கிறோம்... செம்மறி ஆட்டில், வெறும் 100 கிராமை எடுத்துக் கொண்டால், அதில், 300 காலரிகள் இருக்கிறது.. கொழுப்பு மட்டுமே 20 கிராம் உள்ளது.. புரோட்டீன் 25 கிராமும், கொலஸ்டிரால் 100 மி.கிராமும் உள்ளது.
ஆனால், வெள்ளாட்டில் அப்படியில்லை.. 100 கிராமில் 130 காலரிதான் இருக்கிறது.. கொழுப்பு 3 கிராம்தான் உள்ளது.. புரோட்டீன் 27 கிராம் உள்ளது.. அதனால், இவைகளில் வெள்ளாடுதான் சிறந்தது.. இந்த மட்டன்களிலுமே இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி-12 என சத்துக்கள் சமமாக இருந்தாலும்கூட, காலரிகளில் வித்தியாசப்படுகிறது. அதனால், வெள்ளாட்டை பயன்படுத்துவது நல்லது.
நிறைய எண்ணெய் சேர்த்து மட்டனை சமைக்க கூடாது.. டீப் ஃப்ரை செய்தும் சாப்பிடக்கூடாது.. குறைவான எண்ணெய்யில் வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது கிரேவியாகவோ அல்லது சூப்பாகவே செய்து சாப்பிட்டால், சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும். ஆனால், மட்டன் சாப்பிடும்போது கண்டிப்பாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்..குறிப்பாக, கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், காலி பிளவர், தோல் இருக்கும் உருளைக்கிழங்கு போன்றவைகளுடன் சேர்த்து மட்டன் சமைக்கும்போது, மட்டனில் உள்ள கொழுப்புக்கள் உறிஞ்சப்பட்டுவிடும்.. மட்டன் கொழுப்புகள்: அதேசமயம், மட்டன் கொழுப்புகள் அபார ருசியை தரக்கூடியது. அதனால்தான் மட்டன் வாங்கும்போது, கொழுப்புகளை கூடுதலாக கேட்டு வாங்குவார்கள்.. ஓட்டல்களில் சமைக்கப்படும் உணவுகளிலும், இந்த கொழுப்புகளை பயன்படுத்தியே குழம்புகள், பிரியாணிகள் தயாராகும். இந்த கொழுப்பை நாம் சமைத்து சாப்பிடும்போது, உடலுக்கு வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை தருகிறது.. நம்முடைய நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல வலிமையை கூட்டுகிறது.
**ஆட்டின் மூளைப் பகுதியை உணவில் சேர்த்துக் கொண்டால் கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்தி, மார்பக பகுதியை வலிமை அடையச் செய்கிறது.
**ஆட்டின் இதயத்தை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது இதயத்திற்குப் நல்ல பலம் கிடைக்கும். மேலும் நமது மன ஆற்றல் அதிகரிப்பதற்கு நல்ல பலனைத் தருகின்றது.
**ஆட்டின் நுரையீரல் மற்றும் கொழுப்புகள் நமது உடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், நுரையீரல் மற்றும் இடுப்புப் பகுதிக்கு நல்ல வலிமையைத் தருகிறது.
**ஆட்டு இறைச்சியானது, நமது சிறுநீரக சுரப்பியை வலிமை அடையச் செய்து, ஆண் குறியின் வலிமையை மேம்படுத்துகிறது.
**ஆட்டின் ஈரலை சாப்பிட ரத்தம் நன்கு ஊறும் மற்றும் சிறு குழந்தைகளுக்கு கொடுக்க அவர்களுக்கு நல்ல உடல் வளர்ச்சி மற்றும் ரத்தத்தை சுத்திகரிக்கும். சூரியனின் வெப்பத்தினால் ஏற்படும் உடல் சூட்டை தணித்து வறண்ட நாக்கிற்கு இதமான சுவை கொடுக்கிறது.
**ஆட்டிறைச்சி, நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க நல்ல தீர்வாக உள்ளது.
**ஆட்டின் தலை இறைச்சியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி மற்றும் கோளாறுகளை நீக்கி, குடல் மற்றும் நமது தலை பகுதியில் இருக்கும் எலும்பினை வலுப்படுத்துகிறது.
**ஆட்டு இறைச்சியில், அதனுடைய கால்களை சூப் வைத்து குடித்து வந்தால், நம்முடைய எலும்புகள் மற்றும் கால்கள் நல்ல ஆற்றலை பெறுகிறது.
**ஆட்டிறைச்சியை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நம்முடைய பார்வை கோளாறுகள் சரியாகி, கூர்மையான பார்வை மற்றும் நமது கண்களுக்கு மிகுந்த வலிமை கிடைக்கிறது.
அசைவத்தை நிறுத்தினால்...
* இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது, முதலில் உடலின் எடை 3 அல்லது 4 கிலோ வரை குறைய வாய்ப்புள்ளது.
* சைவம் மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சைவ உணவாளர்களுக்கு இதயநோய் பாதிப்பு 24 சதவீதம் வரை குறைவாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.
* உடல் தசைகள் வலுவடைய புரதச்சத்து மிகவும் அவசியம். இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது புரதச்சத்து குறைய வாய்ப்புள்ளது. புரதச்சத்து நிறைந்த சைவ உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.
* இறைச்சி சாப்பிடுவதால் உடல் சூடு அதிகமாக இருக்கும். இறைச்சியைத் தவிர்ப்பதால் உடல் சூடு குறையும்.
* ஆட்டு இறைச்சியில் கொழுப்பு அதிகம். எனவே அதைத் தவிர்க்கும்போது, உடலில் சேரும் கொழுப்பின் அளவு குறையும்.
* அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது சைவ உணவு எளிதில் செரிமானமாகும். ஏற்கனவே செரிமானப் பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும்.
* கடின உழைப்பாளிகளுக்கு சைவம், அசைவம் என எந்த வகை உணவானாலும், உடலில் கலோரிகள் தங்காமல் எரிக்கப்பட்டுவிடும். அசைவம் சாப்பிட்டாலும் எந்த பிரச்னையும் இருக்காது.
* உடலை அதிகம் அலட்டிக்கொள்ளாமல் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், அன்றாடம் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், அசைவ உணவின் சத்துக்களை சைவ உணவின் மூலம் ஈடுசெய்ய முடியும்.