1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வெள்ளை வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்...

1

வெள்ளை வெங்காயம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. இந்த வெள்ளை வெங்காயம் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் சிவப்பு வெங்காயத்தைப் போல நல்ல இனிமையான சுவையாக இருக்காது. பொதுவாக இந்த வெள்ளை வெங்காயம் சாலட்கள், சாண்ட்விச்களில் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் இந்த வெள்ளை வெங்காயம் முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிளேக் நோயை தடுப்பதற்கும் காலரா மற்றும் மஞ்சள் காமாலை நோயை தடுப்பதற்கும் முக்கிய கலவையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர இந்த வெள்ளை வெங்காயம் மனிதர்களின் இனப்பெருக்க உறுப்புகளை சக்திப்படுத்த உதவியுள்ளது.

வெள்ளை வெங்காயத்தில் கலோரிகள் குறைவாகவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த வெள்ளை வெங்காயம் உடலில் இருக்கும் வெப்பத்தை குறைக்கும் சக்தி கொண்டது. வெள்ளை வெங்காயம் ஃப்ரக்டான்ஸ் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்துக்களால் ஆனது. இந்த நார்ச்சத்துகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடலில் இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாவை அதிகரிக்கவும் உதவுகின்றன. இது குடல் இயக்கத்தை சீராக்குகிறது. குடல் தொடர்பான பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது. வெள்ளை வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆற்றல் கொண்டது.

இது உடலை குளிர்விக்கும் பொருளாக இருக்கிறது. இது உடல் வெப்பநிலையை குறைத்து இயற்கையாக உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. மேலும் இந்த வெள்ளை வெங்காயம் சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய அழற்சியை தடுக்கவும் உதவுகிறது. வெள்ளை வெங்காயம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ள வெள்ளை வெங்காயம் நம் உடலில் உள்ள ரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் இது தமனியில் அடைப்புகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. வெள்ளை வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் காணப்படுகிறது.

இது உடலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி கொண்டது. உடலில் இருக்கக்கூடிய நச்சுக்கள் முறையாக வெளியேறும் பொழுது நம்முடைய உடல் ஆரோக்கியம் அடையத்தொடங்கும். மேலும் இது நரம்புகள் மற்றும் தமனிகளில் ரத்த ஓட்டத்தையும் சரியான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. வெள்ளை வெங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது பருவ கால நோய்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளை வெங்காயம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது பல நோய்த்தொற்றுக்களை தடுத்து உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

வெள்ளை வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் காணப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நம்முடைய உடலை ஆரோக்கியம் அடைய செய்கிறது. வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின் சி, பிளேவனாய்டுகள், பைட்டோநியூட்ரியண்ட்கள் போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இந்த வெள்ளை வெங்காயத்தில் இருக்கக்கூடிய பிளேவனாய்டுகள் பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. வெள்ளை வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது.

இதில் 25 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஃபிளேவனாய்டுகள் உள்ளன. இவை நம்முடைய உடலில் இருக்கக்கூடிய செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கின்றன. குரோமியம், குவர்செடின் மற்றும் கந்தகத்தால் நிரம்பியுள்ள வெள்ளை வெங்காயம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வெள்ளை வெங்காயத்தை தொடர்ந்து உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்பதை பல சான்றுகள் காட்டுகின்றன.

வெள்ளை வெங்காயத்தில் இருக்கும் குவர்செடின் மற்றும் சல்பர் போன்ற குறிப்பிட்ட கலவைகள் நீரிழிவு எதிர்ப்பு செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இந்த சேர்மங்கள் சிறுகுடல், கணையம், எலும்பு தசை, கொழுப்பு திசு மற்றும் கல்லீரலில் உள்ள உயிரணுக்களுடன் தொடர்பு கொண்டு உடலில் இரத்தச் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. வெள்ளை வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும். வெள்ளை வெங்காயத்தில் உள்ள எல்-டிரிப்டோபான், அமினோ அமிலங்கள் இயற்கையான மயக்க மருந்தாக செயல்படுகிறது.

இது நல்ல தூக்கத்தைத் தூண்டும். மேலும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனதை அமைதிப்படுத்தவும், நல்ல தரமான தூக்கத்தைப் பெறவும் உதவுகிறது. தொடர்ந்து மன அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இந்த வெள்ளை வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுடைய மன அழுத்தம் எல்லாம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும். பூண்டு மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகளில் இருக்கும் அல்லியம் குழு வயிறு மற்றும் பெருங்குடல் உட்பட சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. வெள்ளை வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் மற்றும் ஃபிளாவனாய்டு சேர்மங்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும். வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் கட்டி செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வருவதிலிருந்து பாதுகாக்கலாம்.

Trending News

Latest News

You May Like