இது தெரியுமா ? இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்...
நாம் மறந்து போன பழமையான பழங்களில் ஒன்று எலந்தபழம் ஆகும்.இந்த எலந்த பழம் கிராமங்களிலுள்ள காடுகளில் அதிகமாக காணப்படுகின்றன.
மேலும் இந்த எலந்த பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.இந்த இலந்தைப் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதால் உடல் சூடு குறைந்து இதமான குளிர்ச்சியுடன் காணப்படும்.மேலும் மாணவர்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள இந்த இலந்தை பழத்தை சாப்பிட்டு வரலாம்.
உடலில் ஏதேனும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால் இந்த இலந்தை இலையை மை போல் அரைத்து காயம்பட்ட இடத்தில் தடவி வந்தால் உடனடி பலன் கிட்டும்.மேலும் கோடைகாலத்தில் நம் உடலில் ஏற்படும் கொப்பளங்கள் சரியாக இந்த இலையின் பொடியை பயன்படுத்தலாம்.
இந்த இலந்தை பழத்தில் பசியை உண்டாக்கக்கூடிய சத்து அடங்கியுள்ளது. மேலும் மலமிளக்கியாக செயல்படுகிறது.
நம் தமிழ்நாட்டில் இந்த பழத்துடன் புளி உப்பு வரமிளகாய் சேர்த்து இடித்து வெயிலில் நன்கு காயவைத்து இலந்தை வடையாக பயன்படுத்துகின்றனர்.
நமது எலும்புகளில் கால்சியம் சத்து அதிகமாக இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது எலும்பு வலுப்பெற்று உறுதியுடன் காணப்படும்.ஏனென்றால் இந்த பழத்தில் சுண்ணாம்புச் சத்து மிகுதியாக உள்ளது.
எவர் எவருக்கு பித்தம் அதிகமாக உள்ளதோ அவர்கள் இந்த இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் குறைந்து காணப்படும்.
உடல் உஷ்ணம் :
கோடைகாலங்களில் சுற்றுப்புற வெப்பம் அதிகரிப்பதால் அனைவருக்குமே உடல் எளிதில் வெப்பமடைந்து அதிக வியர்வை மற்றும் நீர் சத்து இழப்பு ஏற்படுகிறது. இலந்தை பழம் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை வாய்ந்தது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுத்துவார்கள் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் உடற்சூடு தணிந்து, நீர் சத்து இழப்பை சரி செய்கிறது.
ஞாபகத்திறன்
ஞாபக சக்தி அனைவருக்கும் இருக்கிறது என்றாலும் ஒரு சிலருக்கு அதீதமாகவும், ஒரு சிலருக்கு சற்று குறைவாக இருக்கும் நிலை இருக்கிறது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஞாபக திறன் மிகவும் முக்கியம் எனவே மாணவர்கள் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
எலும்புகள்
நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது நமது எலும்புகள் ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். இலந்தை பழங்களில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் இலந்தை பழங்களை தினமும் சாப்பிடவதால் எலும்புகள் வலிமை பெறும்.
பித்தம்
நமது உடலில் இருக்கும் வாதம், பித்தம், கபம் போன்றவற்றில் பித்தம் அதிகரித்தாள் தலைவலி, மயக்கம் போன்றவை அடிக்கடி ஏற்படும் நிலை உண்டாகின்றன. இலந்தை பழத்திற்கு பித்தத்தின் அளவை சமசீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது. எனவே பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டவர்கள் இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
வாந்தி, தலைசுற்றல்
ஒரு சிலருக்கு பேருந்து மற்றும் பிற வாகனங்களில் பயணிக்கும் போதோ அல்லது மலை மீது பயணம் செய்யும் போதோ வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் பயணங்களின் போது ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.
உடல் வலி
கடுமையான உடல் உழைப்பு மற்றும் நோய் பாதிப்புகளாலும் சிலருக்கு உடல் வலி ஏற்படுகிறது. இலந்தை பழங்களில் வலியை குறியாகும் வேதி பொருட்கள் அதிகமுள்ளது. எனவே உடல் வலி உள்ளவர்கள் இலந்தை பழங்களை சாப்பிட்டால் சீக்கிரத்திலேயே உடல் வலி மற்றும் உடற்சோர்வு நீங்க பெறுவார்கள். உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
பசியின்மை
ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு சாப்பிட மூன்று மணி நேரத்திற்குள் மீண்டும் பசியுணர்வு ஏற்படுவது உடல் ஆரோக்கியத்திற்கான நல்ல அறிகுறியாகும். ஒரு சிலருக்கு சில காரணங்களால் பசியின்மை ஏற்பட்டு, சரியாக சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது. இலந்தை பழம் பசியின்மை பிரச்சனையை சுலபத்தில் தீர்க்கும். எனவே இதை அவ்வபோது சாப்பிடுவது நல்லது.
மாதவிடாய் பிரச்சனைகள்
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் ஒரு கடினமான காலமாக இருக்கிறது. இக்காலத்தில் பெண்கள் பலருக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்களை உடலளவிலும் மனதளவிலும் களைப்படைய செய்கிறது. இக்காலத்தில் பெண்கள் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் ரத்த போக்கு அதிகம் ஏற்படாமல் தடுக்கும்.
ரத்த சுத்தி
நாம் சாப்பிடும் உணவு, பருகும் நீர் ஆகியவற்றில் பல மாசுகள் நிறைந்துள்ளன இது நமது ரத்தத்தில் கலக்கும் போது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இலந்தை பழத்திற்கு ரத்தத்தில் இருக்கும் மாசுகளை நீக்கி ரத்ததை சுத்தப்படுத்தும் ஆற்றல் உள்ளது எனவே. அடிக்கடி இலந்தை பழங்களை சாப்பிடுவதால் ரத்த சுத்தி ஏற்படுகிறது.
தூக்கமின்மை பிரச்சனை
தூக்கமின்மை ஒரு மனிதனை மிகவும் அவஸ்தைக்குள்ளாகும் பிரச்சனையாகும்.த்துவிடும். நரம்புகள் சம்பந்தமான குறைபாடுகள் இருப்பவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். இலந்தை பழம் நரம்புகளுக்கு வலிமையை தரும் ஆற்றல் பெற்றிருக்கிறது. இந்த இலந்தை பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தூக்கமின்மை குறைபாடு நீங்கும்.