1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இனி ஆட்டுக்கறி வாங்கினால் "இதை" கேட்டு வாங்குங்க..

1

உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாராக இருந்தாலம், மாதம் ஒருமுறையாவது, குறைந்த அளவில் மட்டன் சாப்பிட்டால், உடலுக்கு வலு கிடைக்கும்.. உடல் சூடு தணியும்.. சருமத்துக்கான பளபளப்பு கூடும்.. பார்வை கோளாறுகள் நீங்கும்..

ஆட்டுக்கறியைவிட, அதன் உறுப்புகளே சத்துக்கள் நிரம்பியவை.. ஆட்டின் கண்களை எடுத்து கொண்டால், நம்முடைய பார்வையை கூர்மைப்படுத்தக்கூடியது.. கபம், சளி, இருமல், நீங்கும்.. மார்புக்கு பலத்தை தரக்கூடியது.. அதனால்தான், பலவீனமானமாவர்கள் நெஞ்செலும்பாக சூப் வைத்து சாப்பிடுவார்கள். வைட்டமின் A, B, C உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக்கூடியது..

ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும்போது, நம்முடைய கால்களுக்கு பலத்தை தருகிறது.. ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு.. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும்.. குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறியை வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி செய்து தருவார்கள்.. ஆட்டின் குடல் எனப்படும் போட்டி செரிமானக் கோளாறுகளை சீர்செய்யக்கூடியது.

ஆட்டு கொழுப்புகளை எடுத்துக் கொண்டால், அபார ருசியை தரக்கூடியது. அதனால்தான் மட்டன் வாங்கும்போது, கொழுப்புகளை கூடுதலாக கேட்டு வாங்குவார்கள்.. ஓட்டல்களில் சமைக்கப்படும் உணவுகளிலும், இந்த கொழுப்புகளை பயன்படுத்தே குழம்புகள், பிரியாணிகள் தயாராகும்.

இந்த கொழுப்பை நாம் சமைத்து சாப்பிடும்போது, உடலுக்கு வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை தருகிறது.. நம்முடைய நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல வலிமையை கூட்டுகிறது.இந்த கொழுப்பை வறுத்தும் சாப்பிடலாம் அல்லது கிரேவி போலவும் தயாரித்து சாப்பிடலாம்..

ஆட்டு மூளையில் கெட்டக் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நினைவாற்றலை அதிகரிக்கும்.இது மனித மூளைக்கு அதிக சக்தியை கொடுக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.புத்தி தெளிவடையும், நினைவாற்றல் அதிகரிக்கும். விந்தணு குறைபாடு உடைய ஆண்கள் இதை சாப்பிட தாது விருத்தி உண்டாகும்.

ஆட்டு மூளையில், மெலிந்த புரோட்டீன் நிறைய உள்ளதால், தசைகளில் உள்ள காயங்கள் எளிதாக குணமாகிவிடும்.. தசைகளின் வளர்ச்சியையும், வலிமையையும் இந்த புரோட்டீன்கள் மேம்படுத்துகின்றன.நம்முடைய உடலில் B12 சத்துக்கள் குறைந்துவிட்டாலே, அனீமியா பிரச்சனை வந்துவிடும்.. உடல் சோர்வு, நரம்பியல் பிரச்சனைகள் இப்படி ஒவ்வொரு பாதிப்புகளும் ஏற்படலாம். ஆட்டு மூளையில் வைட்டமின் B12 உள்ளதால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் பேருதவி செய்கிறது... அத்துடன், இரும்புச்சத்து நிறைந்த ஆட்டுமூளையை சாப்பிட்டு வந்தால், ஹீமோகுளோபின் பிரச்சனை ஏற்படாது.

அதேபோல, ஆண்களுக்கு இந்த ஆட்டு மூளை மிகவும் சிறந்தது.. காரணம், இந்த மூளையில் ஜிங்க் சத்துக்கள் நிறைய உள்ளன.. இது விந்தணுக்களின் உற்பத்தியை போக்குவதுடன், பாலியல் ஆரோக்கியத்தையும் மேம்பட செய்கிறது.. எனவே, விந்தணு குறைபாடு உடைய ஆண்கள், ஆட்டுமூளையை சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும் என்கிறார்கள்.

தேவையான பொருட்கள்.

ஆட்டு மூளை – 2
சின்ன வெங்காயம் – 10 ( பொடியாக வெட்டியது)
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
மல்லித்தூள் 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் -2 டீஸ்பூன்.

 

முதலில் மூளையை சுத்தம் செய்து,அதில் இருக்கும் நரம்பை எடுத்து விட்டு சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.அந்த துண்டுகளை ஒரு சிறிய வானலியில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விடுங்கள்.அத்துடன் ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்,½ டீஸ்பூன் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது-இன்னொரு வானலியை அடுப்பில் வைத்து அதிக எண்ணெய் விட்டு, அது சூடானதும் பொடியாக வெட்டிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள்.பாதி வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்புச் சேர்த்து வதக்குங்கள்,பச்சை வாசனை போனதும் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள்.பொடிகள் நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் , வேகவைத்து வைத்திருக்கும் மூளைத் துண்டுகளை அதில் இருக்கும் தண்ணீரோடு சேர்த்து இதில் கொட்டி கிளறி விடுங்கள். பொறுமையாக கிளற வேண்டும்,இல்லாவிட்டால் மூளை உதிர்ந்து விடும்.

இப்போது,வானலியை ஒரு மூடி போட்டு மூடி 3 நிமிடம் வேகவிடுங்கள்.அதில் இருக்கும் தண்ணீர் வற்றியதும் அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள்.
இப்போது மூளை ஃபிரை ரெடி,சாம்பார் ,அல்லது ரசம் சோற்றுக்கு சிறப்பான சைடிஷாக இருக்கும்.பலான பலான மேட்டருக்கும் பொருத்தமான சைடிஷ்சாக இருக்கும்.
எஞ்சாய்!

Trending News

Latest News

You May Like