இது தெரியுமா ? மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால்...
* உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.
* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.
* உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.
* வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.
* மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.
* மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.
*மஞ்சள் இயற்கையான பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும், ஆன்டிசெப்டிக் மருந்தாகவும் பயன்படுகிறது, சிறிய வெட்டுக்காயமோ தீக்காயமோ ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதியில் மஞ்சள் பொடியை சிறிதளவு தூவிவிட்டால், விரைவில் குணமடையும்.
*ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து, தினமும் ஒரு முறை அருந்தினால் ஜலதோஷம், இருமல் போன்ற பாதிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
*மஞ்சள் புற்றுநோயை எதிர்க்கும் குணம் கொண்டுள்ளது. மஞ்சளில் உள்ள சக்திமிக்க பல்வேறு உட்பொருள்கள் கதிர்வீச்சுகளால் ஏற்படும் கட்டிகள் உண்டாகாமல் பாதுகாக்கின்றன. T-செல் இரத்தப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் செல்கள் மற்றும் குடல் புற்றுநோய் செல்கள் போன்ற கட்டி செல்கள் பெருகுவதையும் மஞ்சள் தடுக்கிறது.
*வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. இது முகத்தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்"சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது.
*ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு. உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது. மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.
*மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதோன்றி இலை 10 கிராம், கற்பூரம் சிறிதளவு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டி வர கால் ஆணி குணமாகும்.
*மஞ்சளையும் வேப்ப இலைகளையும் அரைத்து அம்மை நோய் வந்த வர்களுக்குத் தேய்த்து தலைக்கு நீராட்டப் பயன்படுத்துவார்கள். அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம். மரமஞ்சளை நீர்விட்டு அரைத்து தலையில் பற்றிட உடல் சூடு தணியும்.