1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தண்ணீரில் இந்த அன்னாசிப்பூவை கொதிக்க வைத்து குடித்து வந்தால்...

1

பொதுவாகவே பிரியாணி அனைவருக்கும் பிடித்துப் போக காரணம் அதன் சுவையும் மணமும் தான் இவற்றிற்கு அன்னாசிப் பூவிற்கு அதிக பங்கு உண்டு. இந்த அன்னாசிப் பூ பிரியாணிக்கு மட்டுமல்ல இன்னும் பல விஷயங்களுக்கு நன்மை கொடுக்கிறதென்று தெரியுமா?

கமகமவென வாசனைக்கு சேர்க்கும் அன்னாசிப்பூவின் மருத்துவ நன்மைகள் பலருக்கும் தெரியாமலேயே போயிவிட்டது. முழுக்க முழுக்க ஆன்டி ஆக்சிடென்ட் அடங்கியிருப்பதுதான் இந்த வாசனை பூ.

அன்னாசிப்பூவின் சுவையை அதிகமாக உணர, காஷ்மீர் உணவு ரகங்களின் மீது காதல் கொள்ளலாம். அன்னாசிப்பூவுடன், பல்வேறு நறுமணமூட்டிகள் கலந்து தயாரிக்கப்படும் தேநீர், தாய்லாந்து வீதிகளை உற்சாகமடைய வைக்கிறது. மேற்கத்திய நாடுகளில் நொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் பானங்களில் அன்னாசிப்பூவை இப்போது அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். நுரையீரல் தொடர்பான நோய்களுக்கும், வாதநோய்களுக்கும் சீன மருத்துவத்தில் உணவாகவும் மருந்தாகவும் அன்னாசிப்பூ பயன்படுத்தப்படுகிறது.

சமீபகாலமாகப் பரபரப்பாகப் பேசப்படும் பன்றிக்காய்ச்சலுக்கு `டாமிஃப்ளூ’ மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாத்திரையைத் தயாரிக்க, `ஷிகிமிக் அமிலம்’ எனும் இயற்கை மூலக்கூறு முக்கியக் காரணியாகச் செயல்படுகிறது. மருத்துவக் குணம் நிறைந்த அந்த அமிலம் அன்னாசிப்பூவில் அளவில்லாமல் கிடைக்கிறது.  நோய் எதிர்ப்புச் சக்தி வழங்கி, பல்வேறு காய்ச்சல் வகைகளைத் தடுக்கும் திறன் படைத்த அன்னாசிப்பூவை, காய்ச்சல் பரவிவரும் காலத்தில் உணவில் பயன்படுத்துவது சிறந்தது.

அன்னாசி பூவில், வைட்டமின் A, C என ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளதால், செரிமானத்தை சீராக்குகிறது.. அதனால்தான் அசைவ உணவுகளில் அன்னாசி பூக்களை சேர்க்கிறார்கள்..

இப்படி செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு கை கொடுத்து உதவக்கூடியது இந்த அன்னாசி பூக்களாகும். ஒரு டம்ளர் தண்ணீரில், மிளகு, சீரகம் இரண்டையும் தட்டிப்போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதனுடன் சிறிது அன்னாசி பவுடரையும் கலந்து வடிகட்டி தேன் கலந்து குடித்து வரும்போது, ஜீரண பிரச்சனையுடன சுவாச கோளாறுகளும் நீங்கும்...

அசைவ உணவுகள் இல்லாவிட்டாலும்கூட, வெறுமனே தண்ணீரில் இந்த அன்னாசிப்பூவை கொதிக்க வைத்து குடித்தாலே போதும்.. அதிலும் செரிமான கோளாறு உள்ளவர்கள், வயதானவர்கள், அடிக்கடி வாந்தி எடுக்கும் குழந்தைகள் போன்றோர், இதை குடித்து வரும்போது, வாயு தொல்லை அகலும்.. வயிறு உப்பசம், வயிறு பொறுமல் விலகிவிடும். இதனால், குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் இருந்தாலும், வெளியேறிவிடும்.

குழந்தைகளுக்கும் வாந்தி உள்ளிட்ட பிரச்சனை இருந்தால், இந்த தண்ணீரை தருவார்கள். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் இருந்தால், அவைகளையும் அழித்து வெளியேற்றும் தன்மை இந்த அன்னாசி பூக்களுக்குஉண்டு.

பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிலக்குகள் இருந்தால் அதனை சரிசெய்கிறது இந்த அன்னாசி பூக்கள்.. இந்த பூக்களை வாணலில் போட்டு வறுத்து தூள் செய்து எடுத்து வைத்து கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஒரு ஸ்பூன் பனை வெல்லம், அரை ஸ்பூன் அன்னாசி பவுடர், கால் ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, தினமும் காலையில் குடித்து வந்தாலே ஒழுங்கற்ற மாதவிடாயும் சீராகிவிடும்.

தாய்ப்பாலை பெருக்கக்கூடியது அளவுக்கு சக்தி இந்த அன்னாசி பூக்களுக்கு உண்டு.. அவ்வளவு ஏன்? புற்றுநோய்களை உண்டாக்கும் நச்சுகளையும் அடித்து விரட்டக்கூடியது இந்த பூக்கள்.. கலோரிகள் மிக குறைவான இந்த பூக்களை, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் பயன்படுத்தலாம்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில், மிளகு, சீரகம் இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதித்து வந்ததும், அதனுடன், இந்த அன்னாசி பவுடரை அரை ஸ்பூன் கலந்து, வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் சளி, காய்ச்சல், இருமல் கட்டுப்படும்.. சுவாச கோளாறுகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

இந்த அன்னாசி பூவில் எண்ணெய் தயாரிப்பார்கள்.. இந்த எண்ணெய்யை சரும அலர்ஜிக்கு பயன்படுத்துவார்கள்.. அதேபோல, இந்த எண்ணெய்யை உடம்பெல்லாம் தேய்த்து, மசாஜ் போல செய்துவிட்டால், ரத்த ஓட்டம் சீராகும்.. நரம்புகள் பலப்படும்..

Trending News

Latest News

You May Like