இது தெரியுமா ? 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடித்து வந்தால்...
ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
பல் வலி உள்ள இடத்தில் 2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெய்யை தடவ வலி குணமாகும். ஜாதிக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், சீரகம் 300 கிராம் இவற்றை நன்றாக தூள் செய்து உணவுக்கு முன்னர் 2 கிராம் அளவு எடுத்து சாப்பிட அஜீரணம் குணமாகும் .
ஜாதிக்காய், சுக்கு ஓவ்வொன்றும் 20 கிராம், சீரகம் 50 கிராம் எடுத்து நன்கு தூளாக்கி வைத்துக் கொண்டு அரை கிராம் அளவு எடுத்து அதனுடன் கால் கிராம் சர்க்கரை சேர்த்து உணவுக்கு முன்னர் சேர்த்து உண்ம குடல் வாயு குணமாகும்.
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஜாதிக்காய் பொடி அரை ஸ்பூன் அளவு எடுத்து, சூடான பாலில் கலந்து உண்டு வர தூக்கம் நன்றாக வரும். நரம்பு சம்மந்தமான கோளாறுகள் விலகும் .
இரவு உறங்கும் முன்பு பாதாம் பருப்பை பாலில் அரைத்து அதனுடன் ஜாதிக்காய் பொடி சேர்த்து ஓரு மண்டலம் உண்டு வர நரம்புகள் வலிமை பெற்று ஆண்மை குறைவு நீங்கி நரம்பு தளர்வு நீங்கும்.