1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால்...

1

பாதங்களின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உடல் உறுப்புகளுடன் தொடர்புடையது. பாதங்களை மசாஜ் செய்வதன் மூலமாக உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குகின்றன. அதிலும், குறிப்பாக பாதங்களில் தேங்காய் எண்ணெய்யை தடவுவதன் மூலமாக நல்ல பலன்கள் கிடைக்கின்றன. 

பாதங்களில் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் உடல் முழுவதும் புத்துணர்ச்சி பெறுகிறது, உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. இரவில் நன்றாக தூக்கம் வரவேண்டுமென்றால் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்து பாதங்களில் தடவிவிட்டு தூங்கச் செல்லுங்கள். நல்ல தூக்கம் கிடைக்கும். அதிலும் நன்றாக மசாஜ் செய்தால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். 

மேலும் உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்கிறது. இரவில், படுக்கைக்குச் செல்வதற்கு முன், கால்களை சுத்தமாக கழுவிவிட்டு நல்ல துணி கொண்டு துடைத்த பின்னர் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்கள். பொதுவாகவே கால்களின் வழியாக கிருமிகள் உடலுக்குள் நுழையும் என்பதால் தேங்காய் எண்ணெய் இதைத் தடுக்க உதவுகிறது.

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் முன்பு தங்களுடைய கால்களின் பாதங்களை தேங்காய் எண்ணெயால் குறைந்தபட்சம் 2 முதல் 3 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்தால் போதும். நல்ல தூக்கம் வரும். உடலில் இருக்கும் சோர்வு பறந்து போகும்.

சாதாரண வயிற்றுப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கால்களில் தேங்காய் எண்ணெய் பூசி மசாஜ் செய்து வர குணமாகும்.

உங்களுடைய குழந்தைகளின் பாதங்களில் தினமும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்தால் அவர்கள் புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்கூடாக காண்பீர்கள்.

Trending News

Latest News

You May Like