1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தேங்காய் எண்ணெயை உடலுக்குத் தடவினால்...

1

தேங்காய் எண்ணெயை உடலுக்குத் தடவினால், பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். இதன் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.

கை, கால் மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயைக் கொண்டு உங்கள் கைகளையும், கால்களையும் நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் புத்துணர்ச்சியைப் பெற முடியும். அதோடு, இதில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் உங்களை ரிலாக்ஸாக உணரச் செய்யும்.

கை, கால்களுக்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடாக்கி, மசாஜ் செய்வது வந்தால் சருமத்தின் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். இதனால் கை, கால்களில் ஏற்படும் தசை பிடிப்புகள், மூட்டுகளில் ஏற்படும் வலி ஆகியவை குறையும்.

பாத வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய்

பாத வெடிப்பு மற்றும் பாதங்களில் ஏற்படும் வறட்சியைப் போக்க தேங்காய் எண்ணெய் மிகவும் சிறந்தது.

தினமும் படுக்கச் செல்லும் முன் தேங்காய் எண்ணெயைக் கொண்டு பாதங்கள் மற்றும் குதிகாலில் மசாஜ் செய்ய வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் ஒரு சில நாட்களிலேயே உங்கள் பாதம் மற்றும் கால்களில் உள்ள வெடிப்புகள், வறட்சித் தன்மை மறைந்து பார்க்கவும் அழகாகவும் மென்மையாகவும் இருக்கும்.

குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் மசாஜ்

குளிக்கச் செல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை உங்களின் உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்து, எண்ணெயை சருமம் உறிஞ்ச 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள்.

பின் எப்போதும்போல் வெதுவெதுப்பான நீரில் குளித்தால் உங்களின் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் குழந்தையின் சருமத்தை போல இருக்கும்.

ஷேவிங் க்ரீமுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்

ஆண்கள் ஷேவிங் செய்யும்போது சருமத்துக்கு ஷேவிங் லோஷன்கள் அல்லது சோப்புகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இதுபோன்ற கெமிக்கல் புராடக்ட்டுகளை பயன்படுத்துவதை தவிர்த்துக்கு விட்டு ஷேவிங் கிரீமுக்கு பதில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

கேட்கவே புதுசா இருக்கா? ட்ரை பண்ணி பாருங்க. தேங்காய் எண்ணெயை சருமம் விரைவாக உறிஞ்சாது. அதனால் உங்களால் சிரமமின்றி நிதானமாக, காயங்கள் எதுவும் ஏற்படாமல் ஷேவ் செய்ய முடியும்.

அதே நேரத்தில் சருமத்தை ஈரப்பதமாக்கவும் வைத்திருக்கும். எல்லாவற்றையும் விட ஷேவிங் செய்யும்போது ரேசர்களால் காயங்கள் ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும் தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி இன்பிளமேட்டரி பண்பினால் சருமத்துக்கு பாதிப்பு ஏற்படாது.

தோல் பிரச்னைகளை குறைக்கிறது

தேங்காய் எண்ணெய் கேப்ரிக் மற்றும் லாரிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலம் சருமத்தை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. தேங்காய் எண்ணெயில் வைட்டமின் கே, ஏ மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும், அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு தோல் தொடர்பான பிரச்னைகளை குறைக்க மிகவும் உதவியாக உள்ளது. மேலும், இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இறந்த செல்களை அகற்றி, சரும தொற்று மற்றும் ஒவ்வாமைகளில் இருந்து பாதுகாக்கிறது.

மேக்கப் ரிமூவ் செய்ய தேங்காய் எண்ணெய்

மேக்கப் ரிமூவர்கள் நிறைய மார்க்கெட்டுகளில் கிடைத்தாலும், தேங்காய் எண்ணெய் போல வேறெந்த பொருளும் மேக்கப்பை சுத்தமாக சருமத்தில் இருந்து ரிமூவ் செய்யாது என்று தான் சொல்ல வேண்டும்.

தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே சருமத்தை மென்மையாக்கக் கூடியது. சரும அடுக்குகளில் உள்ள மேக்கப்பை நீக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். மேக்கப்பை நீக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் வறட்சி மற்றும் நீர் இழுப்பு ஏற்படாது.

உதடு வறட்சி, வெடிப்பு நீங்க தேங்காய் எண்ணெய்

குளிர்காலத்தில் பெரும்பாலும் உதடுகள் உலர்ந்து போய் வெடிப்பு ஏற்படும். இது பெரும்பாலும் எல்லோரும் அனுபவிக்கிற பிரச்சனையாகவே இருக்கிறது. நம்மில் பலரும் இ்நத பிரச்சினையை அனுபவித்து இருப்போம். வறண்ட உதடுகளில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படும், தோல் உரிதல், அதனால் ஏற்படும் கடும் வலி ஆகியவை உண்டாகும்.

இதனைத் தவிர்க்க தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் சிறிது தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவலாம். இது உலர்ந்த மற்றும் வெடித்த உதடுகளை விரைவில் சரிசெய்வதோடு உதட்டை ஈரப்பதத்தோடு மென்மையாக வைத்திருக்கச் செய்யும்.

அதிக ஈரப்பதம்

தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. வறண்ட, கரடுமுரடான சருமத்திற்கு இது ஒரு நல்ல வீட்டு வைத்தியம். வறண்ட சருமத்தை தொடர்ந்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வறண்ட மற்றும் கரடுமுரடான சருமம் உள்ளவர்கள் இரவில் படுக்கும் முன் இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கொழுப்பின் அளவைக் குறைக்கிறது :

குறைந்த கொழுப்பு இதயம் தொடர்பான வியாதிகளைத் தடுக்கும். உங்கள் உணவில் தேங்காய் எண்ணெயைச் சேர்ப்பது கெட்ட கொழுப்பைக் குறைக்கும். தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் இருப்பதால் நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்த முடியும். தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. தேங்காயில் 90 சதவிகிதம் சாச்சுரேட்டட் வகை கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்குப் பல்வேறு நற்பலன்களைத் தருகிறது.

பருக்களை குறைக்கிறது

தேங்காய் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இதில் உள்ள லாரிக் மற்றும் கேப்ரிக் அமிலங்கள் சருமத்தில் உள்ள முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவைக் கொல்லும். நிறைய பருக்கள் என்றால் உங்கள் முகத்தில் உள்ள தோல் துளைகள் அடைக்கப்பட்டுள்ளன. எனவே இந்தப் பிரச்னை உள்ளவர்கள் இரவில் தேங்காய் எண்ணெயைத் தடவி வந்தால் துளைகள் திறந்து பருக்கள் குறையும்.

சிறுநீர் தொற்றுக்கு சிகிச்சையளிக்கிறது :

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளால் பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தேங்காய் எண்ணெயை உட்கொள்வது வைரஸ்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும். இது சிறுநீர்ப்பை நோய்கள் மற்றும் சிறுநீரக கல் உருவாவதையும் தடுக்கிறது. போதுமான அளவு நீர் அருந்தாத பலருக்கு சிறுநீரக தொற்றுகள் ஏற்பட கூடும். தேங்காய் எண்ணெய் இயற்கையிலே ஒரு ஆன்டி-பையோட்டிக். எனவே, உங்களின் சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுக்களை முற்றிலுமாக சரி செய்ய தினமும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிடுங்க. இவை சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்களை அழிக்க கூடிய ஆற்றல் கொண்டவையாம்.

ஷாம்புக்கு முன் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை பல ஆண்டு காலமாக தலைமுடிக்கு பயன்படுத்தி வருவதை நாம் அறிவோம். தலைமுடிக்கு உதவும் பல ஊட்டச்சத்துகளை தேங்காய் எண்ணெய் தன்னுள் கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பொடுகுத் தொல்லையை நீக்கவும், உலர்ந்த வெள்ளை செதில்களை நீக்கி உச்சந்தலையின் வேர்க்கால்களை வலுப்படுத்தவும், உச்சந்தலை வறட்சியைப் போக்கவும் தேங்காய் எண்ணெயை தலையில் தாராளமாக சேர்த்து நன்றாக மசாஜ் செய்து பின் தலைக்கு குளிக்கவும். இப்படி செய்வதன் மூலம் மென்மையான, பளபளப்பான தலைமுடியைப் பெற முடியும்.

தோல் நிறம் 

தேங்காய் எண்ணெய் கருவளையங்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. மேலும், அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தோல் அழற்சி மற்றும் முகம் சிவத்தல் ஆகியவற்றைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்த எண்ணெய் சருமத்தை டோனிங் செய்யவும் உதவுகிறது. தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால் இயற்கையான கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது. இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது.

தேங்காய் எண்ணெயின் இதர நன்மைகள் :-

* உடலின் வலிமை மற்றும் ஆற்றலை மேம்படுத்த உதவும்.

* மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

* சளி தொல்லையில் இருந்து விடுபட உதவும்.

* தேங்காய் எண்ணெயில் பூஞ்சை, வைரஸ் மற்றும் கிருமி எதிர்ப்பு பண்புகள் உள்ளது.

* ஆரோக்கியமான தலைமுடி கொண்டவர்கள், தலைமுடியைப் பாதுகாக்க விரும்புபவர்கள் தினமும் காலை குளிப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகத் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு தலைக்குக் குளிக்க வேண்டும்.

* தேங்காய் எண்ணெயை கை, காலில் தேய்த்துவிட்டு பெயருக்குத் தலையின் மேற்பரப்பில் படும்படி தேய்ப்பது தவறு. தலையின் மேற்பகுதித் தோலில் (Scalp) படியும்படி நன்றாகத் தேய்க்க வேண்டும்.

* சருமத்தின் தரம், பொலிவு என இரண்டுக்கும் தேங்காய் எண்ணெய் துணைபுரிகிறது. தேங்காய் எண்ணெயை வெளியே தேய்ப்பதால் மட்டும் அல்ல, உணவு மூலமாக உள்ளுக்கு எடுத்துக்கொள்வதாலும் சருமம் பொலிவுபெறும்.

* தேங்காய் எண்ணெயில் ஆன்டிபாக்டீரியா தன்மை கொண்டிருப்பதால், கிருமித்தொற்றைத் தவிர்த்து, சிராய்ப்புக் காயங்களை ஆற்றும்.

* அடிவயிற்று வலியில் இருந்து விரைவில் விடுபட உதவும். முக்கியமாக மாதவிலக்கு காலத்தில் வயிற்று வலி அல்லது வாய்வால் ஏற்படும் வயிற்றுப் பிடிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும். தேங்காய் எண்ணெய்யில் அதிகளவு ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்திருப்பதால் அடிவயிற்றுவலியைப் போக்கும்.

* தொப்புளில் தேங்காய் எண்ணெய்யை இரவு படுக்குமுன் தேய்த்து விட்டால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். உடலில் உள்ள கசடுகளை நீக்கும்.

* தொப்புளில் தேங்காய் எண்ணெய்யைத் தேய்த்து வந்தால் உடல் சூட்டைத் தணிக்க உதவும். உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடைகுறைப்புக்கும் சிறந்த பலனைத் தரும்.

* உடலில் ரத்த சர்க்கரை அளவையும் குறைத்து நீரிழிவு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

* கண்களில் ஏற்படும் வறட்சியை சரிசெய்யும் மற்றும் மோசமான கண் பார்வையைத் தடுக்கும்.

* இரவு நேரத்தில் தூக்கம் வராமல் சிரமப்படுபவர்கள் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.

* உடலில் ஏற்படும் தசைப்பிடிப்புகளைத் தடுத்து தளர்வாக இருக்க உதவும்.

Trending News

Latest News

You May Like