1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் இந்த வாழைப்பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்

1

செவ்வாழை பழம் சாப்பிடுவதால் குணமாகும் நோய்கள்

  • செவ்வாழை பழம் சாப்பிடுவதால் கல்லீரல் வீக்கம், சிறுநீரக பிரச்சனையை சரி செய்கிறது.  இந்த செவ்வாழை பழத்தினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நோயானது விரைவில் குணமாகும். அதிக உடல் எடை வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பழத்தினை தாராளமாக உண்ணலாம்.
  • செவ்வாழை பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் கண்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது. இதில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் செல்களின் செயல்பாட்டு திறனை சீராக வைத்திருக்கும்.
  • நாம் தினமும் 1 செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் ஆண்களுக்கு உயிர் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெண்கள் அதிகமாக செவ்வாழை எடுத்துக்கொள்வதால் மாதவிடாய் பிரச்சனையானது சீராக இருக்கும்.

பூவன் வாழைப்பழம் பயன்கள்

  • பூவன் வாழைப்பழமானது எளிமையாக அனைத்து இடங்களிலும் கிடைக்க கூடிய ஒன்று. இந்த பூவன் பழமானது செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. பூவன் வாழைப்பழத்தினை உணவிற்கு பிறகு தினமும் 1 பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து முற்றிலுமாக விடுபடலாம்.
  • மேலும் மூல நோய் உள்ளவர்கள் இந்த பழத்தினை எடுத்துக்கொள்ளுதல் மிகவும் நல்லது.

ரஸ்தாளி வாழைப்பழம் நன்மைகள்

  • ரஸ்தாளி வாழைப்பழமானது அதிகம் சுவை  கொண்டவை. கண்களில் ஏற்படும் அனைத்து வித நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது இந்த ரஸ்தாளி பழம்.
  • மேலும் இந்த பழம் சாப்பிடுவதால் உடல் நன்கு வலுவுடன் தென்படும். இதயம் சம்மந்த நோய் உள்ளவர்கள் இந்த ரஸ்தாளி வாழைப்பழத்தினை சாப்பிட்டு வர இதய நோய் அனைத்தும் குணமாகும்.

பேயன் வாழைப்பழம் பயன்கள்

  • உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் இந்த பேயன் வாழைப்பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள வெப்பத்தன்மை நீங்கி உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
  • தொடர் வயிற்று வலி மற்றும் குடல் புண் உள்ளவர்கள் தினமும் 1 பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பச்சை வாழைப்பழம் பயன்கள்

  • குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் இந்த பச்சை வாழைப்பழம். கோடை கால நேரத்தில் நம் உடலானது மிகவும் வெப்ப தன்மை அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வர உடல் சூடு நீங்கி உடலானது குளிர்ச்சி தன்மையாக இருக்கும்.
  • உடலில் இரத்தம் சம்பந்த அனைத்து நோய்களையும் சரி செய்கிறது இந்த வாழைப்பழம். குறிப்பாக வாதம் நோய் உள்ளவர்கள் இந்த பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது.

கற்பூரவள்ளி வாழைப்பழம் நன்மைகள்

  • கற்பூரவள்ளி வாழைப்பழம் நன்மைகள்: கற்பூரவள்ளி வாழைப்பழம் சாப்பிடுவதால் கண்களில் இருக்கும் சூட்டை தனித்து கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
  • இந்த கற்பூரவள்ளி வாழைப்பழமானது மிகவும் இனிப்பு சுவை கொண்டது. இந்த பழமானது ஜீரண கோளாறுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

நேந்திர வாழைப்பழம் பயன்கள்

  • நேந்திர வாழைப்பழமானது நமது உடலிற்கு அதிக இரும்புச்சத்தை கொடுக்கக்கூடிய அற்புதமான பழ வகையாகும்.
  • நேந்திர வாழைப்பழத்தை நாம் பச்சையாகவும், அல்லது அவியல் செய்தோ, சிப்ஸ் முறையிலும் கூட இந்த பழத்தினை சாப்பிட்டு வரலாம். மேலும் இந்த நேந்திர வாழைப்பழத்தில் அதிகம் புரதச்சத்து உள்ளது.
  • நேந்திர வாழைப்பழத்தினை சாப்பிட்டு வருவதால் வயிற்று பகுதிகளில் உள்ள குடற்புழுக்களை நீக்கி விடும்.

மொந்தன் வாழைப்பழம் நன்மைகள்

மொந்தன் வாழைப்பழம் சாப்பிட்டுவர உடலில் அதிகமாக இருக்கும் வறட்சி தன்மை நீங்கிவிடும். மேலும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் வராமல் தடுத்து நிறுத்தும்.

கதலி வாழைப்பழம் பயன்கள்

கதலி வாழைப்பழத்தில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனால் நம்முடைய செல்களின் செயல்பாட்டு திறனை சீராக வைத்திருக்க உதவுகிறது.

எலச்சி வாழைப்பழம் நன்மைகள்

எலச்சி வாழைப்பழம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

Trending News

Latest News

You May Like