இது தெரியுமா ? தாய்மார்கள் தினமும் மாதுளையை உட்க்கொண்டு வந்தால்...

நமது முன்னோர்களின் வீட்டு தோட்டங்களில் கட்டாயம் இடம் பிடிக்க கூடிய தாவரம் என்றால் அது மாதுளையாகத்தான் இருக்க முடியும். இது தன்னுள் பல அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதன் காரணமாகவே நமது தாத்தா பாட்டியின் வீடுகளில் அதிகமாக மாதுளையை பார்க்க முடிந்தது.
சரி அப்படி என்னதான் மாதுளை பழத்தில் நன்மைகள் உள்ளன என்பதை பார்க்கலாம்...மாதுளையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இந்த பழத்தை சப்பிடுவதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
மாதுளையில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
புற்றுநோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் அருமருந்து மாதுளை.
கர்ப்பம் தரித்த தாய்மார்கள் தினமும் மாதுளையை உட்க்கொண்டு வந்தால், பிறக்கும் குழந்தை நல்ல குழந்தைகளின் மூளை வளர்சியுடன் பிறப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
மாதுளை இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தி டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.
மாதுளையை உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், செரிமானம் செய்வதற்கும், குடல் நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
மாதுளையை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் இரத்த ஓட்டம் மேம்பட்டு, ரத்த அழுத்த பிரச்னையில் இருந்து நமது உடலை காக்க முடியும்.
மாதுளம் பழச்சாறு உடலுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமின்றி குளிர்காலத்தில் உடலை உள்ளிருந்து சூடாக வைக்கிறது. ரெகுலராக மாதுளை ஜூஸ் குடித்து வருவது உடலில் இருக்கும் இரும்புச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்து, உடலில் ரத்தம் உருவாகும் செயல்முறையை அதிகரிக்கிறது.
ஒருவர் ரத்த சோகை பிரச்சனையால் அவதிப்பட்டால், அவர் ஒரு மாதத்திற்கு தினமும் மாதுளை ஜூஸ் குடிக்க வேண்டும். ஏனெனில் இது உடல் சோர்வை நீக்கி ஆற்றலை மீட்டு தரும். அதே போல உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக குளிர்காலத்தில் மாதுளை ஜூஸ் தினமும் அருந்தி வந்தால் நல்ல பலனை பெறலாம்.
மாதுளையில் நிறைந்து இருக்கும் வைட்டமின் சி சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. தினமும் மாதுளம் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளக்கும். உடலில் ஓடும் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, இதன் விளைவாக முகத்தில் உருவாகும் பருக்கள் மற்றும் சுருக்கங்கள் தடுக்கப்படுகிறது.
மூட்டுவலி நோயாளிகள் மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நன்மை பயக்கும். செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் வயிறு தொடர்பான நோய்களைத் தடுக்கவும் மாதுளை உதவுகிறது. மற்ற பழங்களின் ஜூஸுடன் ஒப்பிடும் போது மாதுளை ஜூஸ் அதிக ஆக்ஸிஜனேற்ற அளவை கொண்டுள்ளது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்ஸை அகற்றவும், செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும் மாதுளையில் பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருப்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.