1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டு வந்தால்...

1

`பழைய சாதம்’, `பழைய சோறு’, `பழஞ்சோறு’, `ஏழைகளின் உணவு’ `ஐஸ் பிரியாணி’... என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உணவு, அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினருக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம். நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன இதம் தரும் காலை உணவு. மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றிவிடுவார்கள். அடுத்த நாள் அது பழைய சாதமாகிவிடும். பழைய சோறு கிடக்கட்டும்... சோற்றை ஊறவைத்திருக்கும் தண்ணீர்... அந்த நீராகாரம் அத்தனை ருசியானது; எத்தனையோ மருத்துவக் குணங்களைக்கொண்டது.

கிராமங்களில், வெயிலில் வாடி வதங்கி வருபவர்கள், உரிமையோடு கேட்கும் பானம் அது! `கொஞ்சம் நீச்சத்தண்ணி இருந்தா குடு தாயி...’ என்பார்கள். நீச்சத்தண்ணி என்றால், `பழைய சோற்றுத் தண்ணீர்’ என்று அர்த்தம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியோடு எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அறிமுகமான காபி, நீராகாரத்தை மெள்ள மெள்ள ஓரங்கட்டிவிட்டது.

காலையில், குளிரக் குளிர பழைய சோறு தயார். மண் பாத்திரத்தில் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழகத்தில் மட்டும் அல்ல கேரளாவிலும் பாரம்பர்யம் மிக்க உணவு இது. தொட்டுக்கொள்ள ஒரு வெங்காயம், பச்சை மிளகாய் அல்லது ஊறுகாய் போதும்.

நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள். பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல்பருமன் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. சர்க்கரைநோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அளவோடு சாப்பிடலாம்.

1.பழைய சோறு காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான மற்றும் தீங்கு விளைவிக்கும் வெப்பம் தணிக்கப்படுவதால் வயிற்றுக் கோளாறுகள் மறையும்.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம். 

11.ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் செரிமான சக்தியை மேம்படுத்துவதுடன், குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இது மிகச்சிறந்த மலமிளக்கியாகவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. பழைய சோறு அருந்துவது குடல் இயக்கத்தை சீராக வைத்திருப்பதால் அஜீரணக் கோளாறு, மலச்சிகல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

12.காலையில் வெறும் வயிற்றில் பழைய சோற்றைக் குடிப்பது குடல் புண், குழந்தையின்மை, மாதவிடாய் பிரச்சனைகள், கர்ப்பப் பை நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் விதமாக பழைய சோறு அமைகிறது. இது தவிர, எலும்புகளை வலுவாக்கவும் பழைய சோறு உதவுகிறது.

13.. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

14.பழச்சாறு உட்கொள்வது விரைவான செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் முதுமை, எலும்பு தொடர்பான நோய்கள் மற்றும் தசை வலிகளைத் தடுக்கிறது. எனவே எடை குறைய பழைய சோறு சாப்பிடலாம்.

15. பழைய சோறு சாப்பிட்டுபவர்களுக்கு, அம்மை போன்ற தொற்று நோய்கள் வராது.

16.பழைய சோறு சாப்பிட்டால் மந்த நிலை ஏற்பட்டு, துாக்கம் வரும் என்று சொல்வதில், உண்மையல்ல. மூளை செல்களை துாண்டி, நன்கு சிந்திக்க வைக்கும்.

Trending News

Latest News

You May Like