இது தெரியுமா ? சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால்...
பூண்டை சாப்பிடப் பிடிக்காதவர்களுக்கு, பூண்டு, தக்காளி, வெங்காயம் போன்றவற்றை நசுக்கிப் போட்டு சூப் வைத்துக் கொடுக்கலாம். இந்த சூப் குடித்தால் சளி பிடிப்பது குறையும்.
பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.
தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பூண்டை எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்பது முக்கியம். அந்த தகவல் இதோ. சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாத நாள்பட்டநோய். இந்த நோயை குணப்படுத்த இன்னும் மருந்து இல்லை. ஆனால் மாத்திரைகள், சில ஆயுர்வேத மற்றும் வீட்டு வைத்தியம் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அந்த வகையில் தொடர்ந்து பூண்டு சாப்பிடுவது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் என்று கூறுகிறார்கள். பல ஆய்வுகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமல்லாமல், டைப் 2 நீரிழிவு நோயைத் தடுப்பதிலும் பூண்டு பங்கு வகிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.
அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.
தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது. பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.