1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியை

1

குதிரைவாலி அரிசியில் வைட்டமின் A, B, C, D, K, இரும்புச்சத்துக்கள், மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைந்திருக்கின்றன.. உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பி கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் என ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன.உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக இந்த குதிரைவாலி தானியத்தை பயன்படுத்தலாம்.. காரணம், மிகக்குறைந்த அளவே கலோரிகள் இதில் உள்ளன.

அதாவது, 25 கிராம் குதிரை வாலியை சமைத்தால், 75 கிராம் முதல் 90 கிராம் வரை சாப்பாடு கிடைக்குமாம்.. இதில் கிட்டத்தட்ட 65 கலோரிகள் வரை கிடைக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இதில் நார்ச்சத்துக்களும் அதிகம்.. 25 கிராம் குதிரை வாலியில் 2.4 கிராம் அளவிற்கு நார்ச்சத்து இருக்கிறது.. இதனால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி, குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

குதிரைவாலி அரிசியில் மாவுச்சத்து, புரதச்சத்து, தாது உப்புகள், நார்ச்சத்து போன்றவை பெருமளவில் நிறைந்துள்ளது. இது உடல் எடையைக் குறைக்கவும், கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது. மேலும் இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடவேண்டும். தினமும் சாப்பிட்டு வந்தால் சளி, காய்ச்சல் ஏற்படாமல் இருக்கும்.

குதிரைவாலி அரிசியில் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது. குதிரைவாலி அரிசியை சமைக்கும் போது கால்சியம் சத்துக்கள் பாஸ்பேட்டாக மாறுகிறது. இதனால், தினசரி உணவில் குதிரைவாலி அரிசியை எடுத்துக் கொள்வது எலும்பு வலிமைக்கு உதவுகிறது.வளரும் குழந்தைகளுக்கு பாஸ்பரஸ், நார்ச்சத்துக்கள், புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை குதிரைவாலி அரிசியில் அதிகம் காணப்படுகிறது. எனவே குதிரைவாலி அரிசியை வளரும் குழந்தைகளுக்கு தினசரி உணவாக சமைத்து கொடுக்கலாம்.

உடலில் தேங்கிக்கிடக்கும் நச்சுக்களையும், உப்புக்களையும் கரைத்து வெளியேற்றிவிடும். குறைந்த கலோரி + நார்ச்சத்து இவை இரண்டும் இருப்பதால்தான், உடல் எடை குறைய இந்த தானியத்தை பலரும் நாடுகிறார்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற உணவாக இந்த அரிசி உள்ளது.. கார்போஹைட்ரேட் வேகமாக செரிப்பதை இந்த அரிசி தாமதப்படுத்துவதுடன், உடலில் குளுக்கோஸ் அதிகரிப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது. குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதால், இந்த உணவை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கக்கூடாது என்கிறார்கள். ரத்தசோகை பிரச்சனையை தீர்க்கிறது.. பீட்டா கரோட்டின் உள்ளதால், கண் சம்பந்தமான கோளாறு வரவிடாமல் செய்யும்.

குதிரைவாலியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பச்சையம் இல்லாத சிறுதானியமாகும். நெல் மற்றும் மற்றும் பயிற்கள் விளையாத நிலங்களில் குதிரைவாலி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

தினமும் குதிரைவாலி அரிசியை உணவில் எடுத்துக் கொள்வது செரிமான பிரச்சனைக்கு தீர்வு தரலாம். மேலும் இது உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதனுடன், முதியவர்களுக்கு ஏற்படக்கூடிய செரிமானக்கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

இதய நோய் உள்ளவர்கள் குதிரைவாலி அரிசியை தினந்தோறும் எடுத்துக் கொள்வது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை மெதுவாக கட்டுக்குள் வைக்கிறது. இதனால், இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் சீராகவும், இதயத்துடிப்பு சீராக இருப்பதையும் உணரலாம்.

குதிரைவாலியில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இதில் அதிகமாக உள்ளது. கோதுமையைவிட குதிரைவாலியில் ஆறு மடங்கு நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

செரிமான பிரச்சனைகள், ரத்த சோகை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. மேலும் சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள தேவையில்லாத உப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. சிறுநீரை அதிகமாக பெருக செய்கிறது. மேலும் கண் சார்ந்த அனைத்து பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய பீட்டா கரோட்டின் குதிரைவாலியில் அதிகமாக உள்ளது.

இன்று பெரும்பாலானோர் சரியான உறக்கம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குதிரைவாலி அரிசியில் ரிப்போஃப்ளோவின், தயமின் போன்றவை நிறைந்துள்ளது. இதனைக் கஞ்சியாக இரவு உணவாக எடுத்துக் கொள்வது ஆழ்ந்த உறக்கத்தைத் தருகிறது.

இவ்வாறு குதிரைவாலி அரிசியை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

Trending News

Latest News

You May Like