1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தேனையும் நெய்யையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடக் கூடாது..!

1

*காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.

*ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

* தேனையும் நெய்யையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடக் கூடாது. தேனை சூடான உணவுடன் சேர்த்தோ, சூடு செய்தோ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அதிலுள்ள சத்துகள் கிடைக்காது.

* பழங்களைத் தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உணவோடு சேர்த்துச் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் சாப்பிடும்போது தயிர், மோர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடலாம். வெறும் வயிற்றிலோ, பசியாக இருக்கும்போதோ வாழைப்பழம் சாப்பிடக் கூடாது.

*பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.

*கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

* மீன், கருவாடு சாப்பிடும்போது தயிர், மோர் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. மீனுடன் பால் சேர்த்து உட்கொண்டால் வெண்புள்ளிகள் வரும் வாய்ப்புகள் உண்டு. எனவே இரண்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது.

* கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோல, ஸ்வீட் சாப்பிட்டவுடனும் தண்ணீர் குடிக்கக் கூடாது. வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெந்நீர் குடிக்கலாம். ஏனென்றால், இனிப்பு குளிர்ச்சியான உணவு; இதனுடன் குளிர்ச்சியான தண்ணீர் சேரும்போது ஜலதோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது.

* கோதுமையை நல்லெண்ணெயுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடக் கூடாது.

*வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

* பசலைக்கீரையுடன் எள் சேர்த்து சமைத்துச் சாப்பிடக் கூடாது.

* வெற்றிலை போடும்போது, எண்ணெய் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

* சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. மேலும், உடற்பயிற்சி செய்தல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடலுழைப்பு உள்ள வேலையை சாப்பிட்ட பின்னர் சுமார் ஒரு மணி நேரம் வரை செய்யக் கூடாது. இது சாப்பிட்ட உணவின் செரிமானத்தைப் பாதிக்கும். 

* வெண்கலப் பாத்திரத்தை நெய் வைக்கப் பயன்படுத்தக் கூடாது. நெய்யை உருக்காமல் சாப்பிடக் கூடாது. சாப்பிடுவதற்கு முன்னர் சூடுபடுத்தி, எண்ணெய் மாதிரியாக்கித்தான் பயன்படுத்த வேண்டும் அல்லது சூடான உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிடும்போது நெய்யும் எளிதில் செரிமானமாகும், உணவு எளிதாக செரிமானமாகவும் உதவும்.

Trending News

Latest News

You May Like