1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள் இதோ...

1

பனைமரம் ஆனது உயரத்தால் மட்டுமல்ல மருத்துவ குணத்தாலும் உயர்ந்தது. இதனை முன்னோர்கள் தெய்வமாகவும் வழிபட்டுள்ளனர். அத்தகைய பனனமரத்தின் நன்மைகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளது.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்குவை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு போன்ற வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் நீங்கும்.

பணங்கற்கன்டை அம்மை நோயால் பாதிக்கபட்டிருக்கும் போது அடிக்கடி உணவில் பயன்படுத்தி வர உடலின் வெப்பதாகம் நீங்கும்.

பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்தக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அழகும் மற்றும் உடல் பலமும் அதிகரிக்கும்.

பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.

தினமும் காலையில் இந்தப் பாலை இரண்டு டம்ளர் அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சயம் ஆறிவிடும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் வெட்டினால் நீர் வரும் அந்த நீரை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்கள் அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும்.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

அதிகப்படியான வெப்பத்தால் சருமத்தில் வறட்சி, எரிச்சல், சரும வியாதி பொதுவாக பாதிப்புக்குள்ளாக்கும். குறிப்பாக கோடைக்காலத்தில் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் வியர்க்குரு பிரச்சனைக்கு உள்ளாவதுண்டு. நுங்கு சாப்பிடுவதோடு அவ்வபோது வியர்க்குருவின் மீது தடவி வந்தாலும் வியர்க்குரு மறையும். அதே போன்று வெயிலால் வரும் சூட்டு கொப்புளங்களும் கூட நுங்கு தடவி பூசுவதன் மூலம் எரிச்சல் இல்லாமல் சரியாகும். மீண்டும் இவை வரவும் செய்யாது.

உண்வுக்குழாய், இரைப்பை, சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒரு வகை புண். அல்சரால் அவதிப்படுபவர்கள் கோடையில் உணவு முறையில் கவனமாக இல்லாவிட்டால் மேலும் அதிக வீரியத்துக்கு உள்ளாவார்கள். உணவு பழக்கம் மூலமே இதை பெரும்பாலும் குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிதமான கார உணவுகளும் கூட வெயில் காலங்களில் அதிகப்படியான உபாதையை உண்டாக்கும். தினமும் நுங்கு எடுத்துகொள்வதன் மூலம் அல்சர் தீவிரமாகாமல் கட்டுப்படுத்தமுடியும். வயிற்றுப்புண், குடல்புண் ஆறுவதற்கும் வாய்ப்புண்டு.கல்லீரலில் இருக்கும் நச்சை நீக்கி கல்லீரலையும் சுத்தம் செய்ய உதவுகிறது. குடலில் இருக்கும் கழிவுகளும் வெளியேற்றும். நெஞ்சு முதல் வயிறு வரை எரிச்சல் இருந்தாலும் நுங்கு இதமான குளுமை தரும்.

Trending News

Latest News

You May Like