இது தெரியுமா ? டெங்கு காய்ச்சலை தடுக்கும் இயற்கை மருந்து கொய்யா இலை..!
டெங்கு வந்தால் அதிகமான குளிர், உடல் வலி இருக்கும். அப்போது இந்த தேனீரை குடித்தால் நன்மை ஏற்படும். இது முதல் தரமான மருத்துவ சிகிச்சை. காய்ச்சல் தணியும் வரை தேனீர் தயாரித்து குடிக்கலாம். எல்லா விதமான காய்ச்சலும் குணமாகும்.
கொய்யா இலைகளை பயன்படுத்தி டெங்கு காய்ச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். துளிராக இருக்கும் கொய்யா இலைகள் 3 எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும்.
இது டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாகிறது. காய்ச்சல் உள்ளவர்கள் கொய்யா இலை தேனீர் குடித்துவர விரைவில் குணமாகும். கொய்யா இலைகள் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. டெங்கு காய்ச்சலை குணமாக்கும்.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கடை சரக்குகளில் இருந்து காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கோரைக் கிழங்கு, சுக்கு, இந்துப்பு, கடுக்காய், கறிவேப்பிலை, தேன்.
அரை கிராம் இந்துப்பை தூள் செய்து எடுத்துக் கொள்ளவும். சிறிது சுத்தப்படுத்திய கோரைக் கிழங்கு, கறிவேப்பிலை, சிறிது சுக்குப்பொடி, கடுக்காய் பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கவும். இது விஷ காய்ச்சல், கடுமையான உடல் வலியை குணமாக்கும். கண்கள் சிவந்து போவது, சளி பிரச்னையை சரிசெய்கிறது.
பப்பாளி இலை
பப்பாளி இலைகளை டெங்குவுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாக கருதப்படுகிறது. பப்பாளி இலைகளை கஷாயம் செய்து தினமும் இரண்டு வேளை குடிக்கலாம். இது பிளேட்லெட்டுகளை விரைவாக அதிகரிக்கவும், காய்ச்சலை குறைக்கவும் உதவும். இது மிகவும் அதிசயமான ஆயுர்வேத செய்முறையாகும்.
வேம்பு
நோய்த்தொற்றுகளை நீக்குவதில் வேப்ப இலைகள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் டெங்கு பாதிப்பைக் குறைக்கவும், பிளேட்லெட்டுகளை அதிகரிக்கவும் உதவும். இந்த மருந்தை தயாரிக்க வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும்.
நில வேம்பு :
நில வேம்பு இலைச்சாற்றின் பண்புகளை அறிய பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. டெங்குவில் இருந்து மீள உதவும் ஆன்டிவைரல் பண்புகள் அவற்றில் காணப்படுகின்றன. இந்த இலைகள் மற்ற வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. அவற்றின் டிகாஷன் செய்து குடிக்கலாம்.
பிரியாணி இலை
உணவின் சுவையை அதிகரிக்க பிரியாணி இலைகள் சேர்க்கப்படுகின்றன. இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால், ரத்த தட்டுக்களை அதிகரித்து டெங்குவை குணப்படுத்தலாம். மருத்துவ ஆலோசனையின் பேரில் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை சாப்பிடலாம். ஆனால் எந்த சூழ்நிலையிலும் மருத்துவர் கொடுக்கும் மருந்தை புறக்கணிக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.