1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினமும் குளிப்பதற்கு முன் குப்பைமேனி இலைகளை அரைத்து...

1

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களையும் காய்களையும் உணவில் சேர்த்துக் கொண்டால், தோலில் ஏற்படும் அனைத்து வியாதிகளும் நம்மை அண்டாது.

தினமும் குளிப்பதற்கு முன் குப்பைமேனி இலைகளை அரைத்து பத்து நிமிடம் ஊறிய பின், குளித்து வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள சொறி,  சிரங்கு, அரிப்பு நாளடைவில் நீங்கும்.

கார்போக அரிசி, பாசிப்பயிறு இரண்டையும் அரைத்து உடலில் தேய்த்து குளிப்பதினால் தோல்நோய் வருவதை தவிர்க்கலாம்.

வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் அரைத்து தினமும் தேய்த்துக் குளிக்க தோலின் நிறம் கூடும். வேப்பிலை ஆன்டி-பாக்டீரியல்  தன்மை கொண்டது.

அறுகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து தேமல், தடிப்பு உள்ள இடத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் நல்ல பயன் தரும்.

சரும அலர்ஜியைத் தடுக்க சில தடுப்பு நடவடிக்கைகள்

பருவ மழையின் போது சரும அலர்ஜியை உருவாக்கும் அபாயத்தை குறைக்கவும், அதனை மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும் சில அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

மழைக்காலத்தில் வெளியில் சென்று வந்தால் வெதுவெதுப்பான நீர் கொண்டு குளிப்பது மிகவும் அவசியம். இது ஈரப்பதத்தால் வளரும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்க உதவும்.

ஈரமான ஆடைகளை நீண்ட நேரம் அணிந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஈரமான உடைகள் சரும பிரச்சனை இருந்தால் அதனை மேலும் மோசமாக்கும்.

வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகள், கால் விரல்கள், மார்பகங்களின் அடிப்பகுதி போன்ற பூஞ்சை தொற்று சுலபமாக ஏற்படக்கூடிய பகுதிகளில் பூஞ்சை எதிர்ப்பு கிரீம்கள் அல்லது பவுடர்களைப் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற கிரீம்கள் அல்லது பவுடர்கள் பூஞ்சைக்கு எதிராக செயல்படுவதோடு, சருமத்தில் ஏற்படும் அவற்றின் வளர்ச்சியையும் தடுக்க உதவும்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அலர்ஜி, கொப்புளங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவுகளை தினமும் உங்களின் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 

அதிக சரும அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை தீவிரமாக எடுத்துக் கொண்டு உடனடியாக சரும மருத்துவரை அணுகி அவரின் உதவியை நாடுவதே மிகவும் அவசியம். அதைவிடுத்து வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்ய முயல்வது அதன் நிலையை மேலும் மோசமாக்கலாம்.


அதுமட்டுமின்றி, சருமப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வும், சரியான நேரத்தில் தலையீட்டும் சரும அலர்ஜியை சரி செய்வது மிகவும் முக்கியம்.

Trending News

Latest News

You May Like