1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? எடை குறைக்க உதவும் பச்சை மிளகாய்..!

1

உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது. பச்சை மிளகாயில் இது போன்ற பல பண்புகள் உள்ளன, இவற்றை உட்கொள்வது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும். வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, இரும்பு, பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற கூறுகள் பச்சை மிளகாயில் உள்ளன. எனவே உடல் எடையை குறைக்க பச்சை மிளகாயை உணவில் பயன்படுத்துவது எப்படி என்பதை இப்போது காண்போம்.
 

பச்சை மிளகாயை உட்கொண்டால், அதை அதிகமாக சாப்பிடவே கூடாது. ஏனெனில் பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் செரிமானம் பலவீனமாக இருந்தால், பச்சை மிளகாயை அதிக அளவில் சாப்பிட வேண்டாம். பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

பச்சை மிளகாயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. செரிமானம்- பச்சை மிளகாயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது பெருங்குடலை சுத்தப்படுத்துகிறது மற்றும் வழக்கமான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.

2. சருமம் பளபளக்கும்- பச்சை மிளகாயில் உள்ள வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் ஈ இயற்கை எண்ணெயை உருவாக்குகிறது, இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பருக்கள், சொறி, புள்ளிகள், மற்றும் சுருக்கங்கள் இதன் உபயோகத்தால் குணமாகும்.

3. இதயநோய் பாதிப்பு குறையும் : மிளகாய், மிளகு போன்றவற்றை சாப்பிடுபவர்களுக்கு இதயம் சமப்ந்தப்பட்ட நோய்கள் அல்லது புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று அமெரிக்க இதய நல அராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வாரத்தில் 4 நாட்கள் பச்சை மிளகாயை எடுத்துக் கொண்டவர்களின் இறப்பு விகிதம் என்பது மிளகாய் சாப்பிடாதவர்களைக் காட்டிலும் குறைவாக உள்ளது.

மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்.

Trending News

Latest News

You May Like