1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வயிற்றுப் புண், வயிற்றுப் புழுக்கள் நீங்க பாட்டி வைத்தியம்..!

1

வயிற்றுப் புண்:-

  • ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
  • முள்ளங்கிக் கீரையை வெந்தயம் ஊற வைத்த நீரில் அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும்.
  • சாணாக்கிக் கீரையை பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.
  • வயிற்றுப் புழுக்கள்:-
  • பிரண்டை இலையுடன், வேப்பிலை (சிறிது), மிளகு (3) மூன்றையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.
  • நல்வேளைக் கீரையை கைப்பிடி அளவு, மூன்று மிளகு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து தினமும் காலையில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள், கீரிப்பூச்சி, நாக்குப் பூச்சி கோளாறுகள் தீரும்.

வயிற்றுப் புண் மற்றும் கிருமிகள் தீர

1.வயிற்றுக் கிருமிகள்,புண் நீங்க:-சுண்டை வற்றலை அடிக்கடி உணவில் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட வயிற்றில் உள்ள கிருமி,புண்,வலி முதலியன தீரும்.

2.குடல்கிருமி,புண் தீர:-மாங்கொட்டைப் பருப்பைக் காயவைத்து இடித்துத் தூள் செய்து ஒரு சிட்டிகை அளவு காலை மாலை தேனில் குழைத்து உண்டு வர குடலில் உள்ள கிருமி,வயிற்றுப் புண் நீங்கும்.

3.மலப் புழுக்கள் வெள்யேற:-பிரம்மத் தண்டு வேரைப் பொடி செய்து இரவில் மட்டும் வெந்நீரில் கலந்து குடித்துவர மலத்தில் வருகிற புழுத் தொல்லைகள் தீரும்.

4.வயிற்றுப் புண்,கிருமிகள் தீர:-மாதுளம் பழத் தோட்டைப் பொடி செய்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் வெந்நீரல் கலந்து குடிக்க வயிற்றுப் புண்,கீருமிகள் முதலியன தீரும்.

5.குடல் புழுக்கள்,வயிற்று வலி,வயிற்றுப் புண்,மூலம் தீர:-மாதுளம் பழம் அடிக்கடிச் சாப்பிட்டு வரத் தீரும்.

6.வயிற்றுப் பூச்சிகள் தீர:-சிறிதளவு பப்பாளிப் பாலை விளக்கெண்ணையடன் கலந்து இரவில் குடித்து வர சில தினங்களுக்குள் வயிற்றுப் பூச்சிகள் தீரும்.

7.வயிற்றில் உள்ள கிருமி வயிற்று வலி தீர:-தினசரி அன்னாசிப் பழம் சாப்பிட்டு வர சில தினத்தில் வயிற்றுக் கிருமி தீரும்.

8.வயிற்று வலி,வயிற்றுக் கிருமி நீங்க:-இலவங்கப் பட்டையை வாரத்திற்கு இரு முறை உணவுடன் சேர்த்து உண்டு வர வயிற்று வலி,கிருமி தீரும்.

9.வயிற்றுப் பூச்சிகள்,வயிற்று வலி நீங்க:-பாகற் காயின் விதையை அரைத்துப் பாலுடன் கலந்து குடித்து வர வயிற்றுப் பூச்சிகள்,வயிற்று வலி தீரும்.

10.வயிற்றில் உள்ள நாக்குப் ப+ச்சிகள் தீர:-குப்பைமேனி வேரைப் பொடி செய்து கசாயம் வைத்துக் குடித்து வர வயிற்றுக் கிருமிகள் தீரும்.

11.குடல் கிருமிகள் வெளியேற:-வரிக் கும்மட்டிக் காய்ச் சாற்றுடன் கருஞ் சீரகத்தைச் சேர்த்து அரைத்து விலாவில் இருபுறமும் பூசிவர வயிற்றுக் கிருமிகள் வெளியேறும். 

  • சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.
  • மலச்சிக்கல் குணமாக – சுரக்கொன்னை மர பூவை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு பால் சாப்பிட மலச்சிக்கல் வராது.
  • குடல் வலிமை பெற – வில்வமர பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர நலமாகும். வலிமை பெரும்.
  • மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
  • சுரக்காய் வாரம் 2 தடவை சாப்பிட்டு வர மலத்துடன் இரத்தம் வருவது நிற்கும்.
  • குழந்தையின் வயிற்றின் மீது சூடுபடுத்திய வெற்றிலையை போட்டு வைத்தால் பொருமல் வலி குணமாகும்.
  • வயிற்று வலிக்கு – கசகசாவுடன் கருப்பட்டி மற்றும் 4 கிராம்பு பொடி செய்து மூன்று வேளை சாப்பிட குணம் கிடைக்கும்.
  • மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் இரத்தம் வருவது நிற்கும்.
  • வயிற்றுப் பூச்சி ஒழிய – பாகற்காய் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சி புழுக்கள் ஒழியும்.
  • பேதி குணமாக – மாங்கொட்டையை பருப்பு பொடி செய்து பசும்பாலுடன் கலந்து சாப்பிட பேதி நிற்கும்.
  • அஜீரணம் சரியாக – ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை. இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடிக்கநிவர்த்தியாகும்.
  • வாயு தொல்லை நீங்க – வெள்ளைப்பூண்டு பசும்பாலில் வேகவைத்து சாப்பிட்டு வர விலகும்.
  • வாயு நீங்கி நல்ல பசி எடுக்க – விளாம்பழத்தின் கொழுந்து இலைகளை பறித்து கஷாயம் வைத்து சாப்பிட வாயு நீங்கி நல்ல பசி எடுக்கும்.
  • வயிற்று நோய் குணமாக – சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட குணமாகும்.
  • குடல் புழுக்கள் – தும்மட்டி காய் சாற்றில் கருஞ்சீரகத்தை அரைத்து விலாவில் பூசினால் குடல் புழுக்கள் வெளியேறி விடும்.
  • வயிற்று வலி தீர – ஆமணக்கு துளிரை விளக்கெண்ணையில் வதக்கி தொப்புளில் வைத்து கட்ட சூடால் வரும் வயிற்று வலி தீரும்.
  • வயிற்று போக்கு தீர – நீர்முள்ளி விதையை பொடி செய்து 1 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டு வர மோகம், வயிற்றுப் போக்கு தீரும்.
  • வயிற்று பூச்சிகள் ஒழிய – வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் ஒரு கரண்டி தேன் கலந்து காலை, மாலை 2வேளை சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் தொந்தரவு தீரும்.
  • குடல் புண் குணமாக – மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.
  • வயிற்றுவலி குணமாக – குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர தீரும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.
  • வயிற்று புண், வாயு, பசியின்மை, மாதருக்கு உதிரப்போக்கு சரியாக – நாய்வேளை இலையை சமைத்து உணவுடன் சாப்பிட்டு வர சரியாகும். வயிற்று வலி, வயிற்று பொருமல். 
  • அஜீரணம் குணமாக – ஏலக்காய் பொடி தேனில் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று பொருமல். அஜீரணம் குணமாகும்.
  • வயிற்றுப் புழுக்கள் வெளியேற – எருக்கம் இலைச்சாறு 3 துளியை 10 துளி தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும். ( குழந்தைகள்ளுக்கு கூடாது ).
  • வயிறு பெருத்து உடல் சிறியதாக இருக்கும் குழந்தைகளுக்கு – கோரைகிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்க சரியாகும்.
  • வயிற்றுப் பூச்சிகள் வராமல் தடுக்க – அன்னாசிப்பழம் தினமும் சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
  • பேதி நிற்க – அவரை இலை சாரை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும். 
  • தொடர் வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.
  • வாழைப்பூவை வாரம் 1 நாள் கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண்ஆறும்.
  • உஷ்ணபேதி குணமாக – உலர்ந்த மாம்பூ, சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட குணமாகும்.
  • கழிச்சல் குணமாக – மாங்கொட்டை பருப்பு, மாதுளம்பூ, ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சாப்பிட கழிச்சல் குணமாகும்.
  • குடல் புழுக்கள் அழிய – மாதுளம்பழம் பழம் படுக்கைக்கு செல்லும் முன் சாப்பிட குடல் புழுக்கள் அழியும்.
  • வயிற்றுக் கடுப்பு நீங்க – அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து சாப்பிடலாம்.
  • குடல் புண் குணமாகவும், வயிற்றுப் புழுக்கள் அழியவும் – அகத்திக் கீரை நல்ல உணவு.
  • குடல் புண் தீர – முட்டைகோஸை நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை பருகி வர குடல் புண் குணமாகும்.
  • பித்தத்தை குறைக்க – விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினம் ஒரு பழம் சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.
  • பேதி நீங்க – ஜாதிக்காயை தண்ணீர் விட்டு அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுபோட பேதி நிற்கும்.
  • கீரையை சமைத்து உண்டு வர மகோதரம் தீரும்.
  • ஜீரண மண்டலம் சீர்பட – இரவு சாப்பாட்டை 7 மணிக்குள்ளாகமுடித்துவிட்டால்
  • ஜீரண மண்டலம் சீர்படும். பசியிருப்பின் பழச்சாறுகள் மட்டும் அருந்தலாம்.

Trending News

Latest News

You May Like