1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? உடை எடையை குறைக்க விரும்புவோருக்கு சீரக தண்ணீரை குடிப்பதை விட எளிய வழி எதுவுமில்லை..!

1

உடை எடையை குறைக்க விரும்புவோருக்கு சீரக தண்ணீரை குடிப்பதை விட மிக சிறந்த எளிய வழி எதுவுமில்லை. சீரகம் உடலில் உள்ள தளர்வான கொழுப்பு சதைகளை கரைக்க வல்லது. எடை குறைய விரும்புவோர் தங்கள் உணவில் ஜீரகம் சேர்த்து கொள்வதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஜீரணத்திற்கு உதவுவதிலும், நமது உடல் அமைப்பிலிருந்து தேவையற்ற நச்சுகளை அகற்றுவதிலும் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலில் உள்ள செரிமான அமைப்பை பிரச்சனையில்லாமல், நச்சுகள் இன்றி சரியாக வைத்திருப்பது சரியான உடல் எடையை பராமரிப்பதற்கும் , தேவையற்ற கொழுப்பு இழப்புக்கும் முக்கியமான ஒன்றாகும். எனவே அன்றாடம் சீரகம் எடுத்து கொள்வதை வழக்கமாக்கினால் எடை அதிகரிப்பு தொடர்பான காரணிகளை நிர்வகிக்க அது உதவும். சீரகமானது உடலிலுள்ள கொழுப்புகளை விரைவாக கரைக்கும் தன்மை உடையது என்பதால், எடையை குறைக்க விரும்பும் ஒரு நபரின் முயற்சியை எளிதாக்கும்.

சீரகத்தை தண்ணீரில் ஊற வைப்பதனால் பல நன்மைகளை கிடைக்கின்ற. இந்த இயற்கையான செயல்முறையின் மூலம் சீரக விதைகள் தண்ணீரை தக்க வைத்து கொள்கின்றன. சீரகத்திலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் கலக்கின்றது. சீரகத்திலிருந்து வெளி வந்த ஊட்டச்சத்து தண்ணீரில் மஞ்சள் நிறத்தில் கலந்து விடுகிறது. சீரக தண்ணீர் மிக குறைந்த கலோரி உள்ள பானம். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. காலை வெறும் வயிற்றில் அல்லது உணவிற்கு முன் சீரக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமற்ற ஒன்றை சாப்பிடுவதை தடுக்கலாம்.

விரைவான எடை இழப்புக்கு, சீரக தண்ணீரை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை குடிக்கலாம். காலை வெறும் வயிற்றில், மதியம் ஹெவியாக சாப்பிடுவதை தவிர்க்க மற்றும் இரவு உணவிற்குப் பின் (செரிமானத்திற்காக) பருகலாம்.

சீரக நீரில் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து குடித்தால் எடை குறைப்பிற்கு இன்னும் அதிக உதவும். ஒரு தேக்கரண்டி சீரகத்தை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவே ஊறவைத்து விட்டு அடுத்த நாள் காலை முதல் இரவு வரை கூட பருகலாம். வெந்தயம் மற்றும் சீரகம் இரண்டையுமே தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து அதை வடிகட்டி குடித்து வந்தால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சினைகள், செரிமான பிரச்சனை உள்ளிட்ட பல கோளாறுகளை சரி செய்யும்.

 

சீரகம் மட்டும் உங்கள் எடையைக் குறைக்கும் வேலையை செய்யாது. சரியான உணவு முறையை பின்பற்றுவதிலிருந்து, கலோரிகளை எரிக்க உதவும் உடல் பயிற்சிகள் வரை அனைத்தையும் பின்பற்றி கூடவே சீராக தண்ணீரை குடிப்பது மிக நல்ல பலனை கொடுக்கும் 

Trending News

Latest News

You May Like