1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இந்த கோடை காலத்தில் சாப்பிடவே கூடாத உணவுகள்..!

1

``கோடைக்காலத்தில் அதிகஅளவில் தண்ணீர் குடிக்கவேண்டும். கோடையில் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும், 13 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று சிலர் கணக்குச் சொல்வார்கள். கணக்குவைத்துக்கொண்டு லிட்டர் லிட்டராகக் குடிக்கவேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் 150 முதல் 200 மில்லி தண்ணீர் குடிக்கவேண்டும். ஆணோ, பெண்ணோ அவர்களது உடல்எடையைக் கணக்கில்கொண்டு, இத்தனை லிட்டர் தண்ணீர்தான் குடிக்கவேண்டும் என்று சொல்வது தவறான விஷயம். போதிய இடைவெளியில் தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டால் சருமம் வறட்சியாகிவிடும்.உணவுப் பழக்கங்களால் மலச்சிக்கல் ஏற்படும் என்றாலும், நீர்ச்சத்து இழப்பாலும் மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 

தவிர்க்கவேண்டிய உணவுகள்:

மாங்காய், மாம்பழம், அன்னாசி, பலா போன்ற அனைத்துமே கோடையில் கிடைக்கும் பழங்கள். அவற்றை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடாமல் குறைந்த அளவு மட்டுமே சாப்பிடவேண்டும். துரித உணவுகளை `மெல்லிய விஷம்' என்பார்கள். சிலரது இரவு உணவே பீட்சாவாகத்தான் இருக்கும். இதுபோன்று தொடர்ந்து துரித உணவுகளைச் சாப்பிடுவதால் இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். துரித உணவுகளைத் தினமும் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். வாரத்துக்கு ஒருமுறை வேண்டுமானால் சாப்பிடலாம். மதுவை அதிக அளவு எடுத்துக்கொள்வதால் முக்கியமாகப் பாதிக்கப்படுவது கல்லீரல்தான். கோடைக்காலத்தில் நமது உடலில் ஏற்கெனவே சூடாக இருக்கும். அந்த நேரத்தில் மது அருந்தும்போது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதனால் துரித உணவுகளையும் மதுவையும் முடிந்த அளவுக்குத் தவிர்ப்பது நல்லது.

கோடையில் அசைவ உணவுகள் சாப்பிடுவதைச் சிலர் தவிர்ப்பார்கள். சிக்கன், மீன் ஆகியவற்றை வாரத்துக்கு மூன்று நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளை எண்ணெய்யில் பொரித்தால் அதிலிருக்கும் புரதச் சத்துகள் எண்ணெய்யில் கலந்துவிடும், உடலுக்குக் கிடைக்காது. குழம்பு வைத்துச் சாப்பிடுவதே நல்லது. மட்டன் உள்ளிட்ட பிற இறைச்சிகளை மாதத்துக்கு இரண்டுமுறை எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார் அவர்.

 

தண்ணீர் குறைவாகக் குடிப்பதால் சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் 4 டீஸ்பூன் பார்லியை நீர்விட்டுக் கொதிக்க வைக்கவேண்டும். அது பாதியாக வற்றியதும் அதில் அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நாள் முழுவதும் குடித்து வந்தால் பிரச்னை சரியாகிவிடும்.

வெயில் காலத்தில் கார உணவுகள் எடுப்பது பித்த தோஷத்தை அதிகரிக்கும். இது உடல் சூட்டை அதிகரித்து அதிகப்படியான வியர்வை உண்டு செய்து நீரிழப்பை ஏற்படுத்தும். மேலும் அஜீரணம் மற்றும் அசெளகரியத்தையும் உண்டு செய்யும் என்பதால் கார உணவுகள் கண்டிப்பாக சேர்க்க கூடாது.

பர்கர், சமோசா மற்றும் ப்ரெஞ்ச் ப்ரைஸ் போன்ற வறுத்த உணவுகள் அதிக நீரிழப்பை உண்டு செய்கின்றன. மேலும் இதில் அதிக உப்பு இருக்கும். இதனால் செரிமானம் சிக்கலை உண்டு செய்யும். இவற்றில் அதிக எண்ணெய் இருப்பதால் மந்தமாக உணர வைக்கும்.

பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் போன்ற உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் இவை உடலில் வெப்பநிலையை அதிகரிக்க செய்கிறது. இதனால் கோடை காலத்தில் உலர் பழங்களை சாப்பிட்டு வந்தால் எரிச்சல் உணர்வு மற்றும் அடிக்கடி சோர்வு ஏற்படக்கூடும்.

சாஸ்கள் மற்றும் சாலட் டிரஸ்ஸிங்ஸ் சஸ்க்ள் போன்ற உணவுகள் பிடித்தமானவையாக இருந்தாலும் அது ஆரோக்கியமான கோடை உணவுகளாக இருக்கது. இதில் பயன்படுத்தப்படும் பொருள்கள் வீக்கம் மற்றும் மந்தத்தன்மையை உண்டு செய்யும். இதில் அதிக அளவு மோனோசோடியம் குளூட்டமெட் மற்றும் உப்பு உள்ளது. இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் நீரிழப்பு ஏற்படுகிறது.

ஏற்கனவே வெப்பம் கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். அப்போது இந்த கிரில்ட் சிக்கன் வகைகளை சாப்பிடும் போது நம் உடல் வெப்பநிலை இன்னும் அதிகமாக அதிகரிக்கும். 

சோடா, ஆற்றல் பானங்கள் மற்றும் விளையாட்டு பானங்கள் போன்ற சர்க்கரை பானங்கள் தவிர்க்க வேண்டும். இவை அதிக அளவு சர்க்கரையை கொண்டிருப்பதால் இது நீரிழப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

கோடை காலத்தில் உடலை ஹைட்ரேட் ஆக வைத்திருப்பது அவசியம். உங்கள் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க நீங்கள் விரும்பினால் இந்த கோடை காலம் முழுவதும் காபி குடிப்பதை தவிர்த்து விடுங்கள். இதை கேட்பதற்கு சற்று கடினமாக இருந்தாலும் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் வழக்கத்தை விட குறைவான அளவு காபி குடித்து வரலாம். உதாரணமாக ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கப் காபி குடிப்பவர்கள் இந்த கோடை வெயிலுக்கு ஒரு கப் காபி குடிப்பது போதுமானது. காஃபி உடலை நீரிழப்பு செய்கிறது. இது நீர்ச்சத்து குறைக்க கூடிய டையூரிடிக் ஆகும். உடலின் வெப்பநிலையை அதிகரிக்கிறது. கோடைக்காலங்களில் காஃபியை கைவிட முடியாவிட்டாலும் அதன் நுகர்வை கட்டுப்படுத்துவது நல்லது. மிதமான அளவு ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும்.

ஆல்கஹால் எப்போதுமே தவிர்க்க வேண்டியது தான். கோடை காலங்களில் இது நீர்ச்சத்தை இழக்க செய்யும். ஹீட் ஸ்ட்ரோக் உண்டு செய்யும். அதனோடு தலைவலி, உலர் வாய் மற்றும் உடல் வெப்பநிலை அதிகரிப்பது போன்றவற்றையும் செய்யும்.

Trending News

Latest News

You May Like