இது தெரியுமா ? உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் உண்ண வேண்டிய உணவுகள்..!

இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் கலோரி குறைவு. அவைகளை சாப்பிடுவது நல்லது.
தினமும் நீங்கள் சாப்பிடும் உணவில் 80 சதவீதம் வீட்டு உணவாக இருக்க வேண்டும். 20 சதவீதம் வெளி உணவாக இருக்கலாம்.
பேக்கரி உணவுகளில் கலோரி அதிகம். அதில் சேர்க்கப்படும் வனஸ்பதியில் இருக்கும் டிரான்ஸ்பாற்றி ஆசிட் கொழுப்பை அதிகரித்து உடலை குண்டாக்கும்.
- நார்ச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். காய்கறி, பழங்கள், தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பிஸ்கெட், மைதா, வெள்ளை அரிசி உணவுகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள்.
ஒரு உணவை சாப்பிடும் முன்பு அது ருசியா என்று மட்டுமே பார்க்கிறோம். அது ஆரோக்கியமானதா என்று பார்க்க பழகிக்கொள்ளுங்கள். -
மாலை நேரத்தில் இனிப்பு, காரத்திற்கு பதில் காய்கறி- பழ சாலட் சாப்பிடுங்கள். மோர் பருகுங்கள்.
ஐஸ்கிரீம், கொழுப்புள்ள பால், கேக் வகைகளை தவிர்த்திடுங்கள்.
முடிந்த அளவு வீட்டு வேலைகளை செய்யுங்கள். வாரத்தில் நான்கு நாட்களாவது 45 நிமிடங்கள் வேகமான நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
இதை கடைபிடித்தால் எடை குறைந்து-இடை மெலிந்து ஆரோக்கியமாக வாழலாம்!
நீங்கள் தினமும் 6-7 மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும். நிம்மதியான தூக்கம் உங்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் உணர வைப்பதை தவிர பல நன்மைகளை தருகிறது. ஆய்வின்படி, மோசமான தூக்கம் எடை அதிகரிப்பதற்கான மிகப்பெரிய ஆபத்து காரணிகளில் ஒன்று என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக உணவை சாப்பிடும் பொது அதனை பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அதற்கு பின்னணி காரணம், அப்போது தான் அதன் சத்துக்கள் உடலை சேரும். எனவே உணவை சரியாக மென்று சாப்பிடுவது மிக முக்கியம். அப்படி நீங்கள் வேகவேகமாக சாப்பிடும் போது அது எடை அதிகரிப்பு பிரச்சனைக்கு வழிவகுக்கும். வளர்சிதை மாற்றத்தை கூட பாதிக்கலாம். மெதுவாக சாப்பிட்டால் உங்கள் உடலில் எடை குறைக்கும் ஹார்மோன்களை அதிகரிக்க முடியும்.