1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? விந்தணுவை அதிகரிக்க உதவும் உணவு வகைகள்..!

1

ஜிங்க் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், நீரிழிவைத் தடுக்கலாம். எனவே அந்த சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள்.

அதுமட்டுமல்லாமல், ஜிங்க் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சரியாக நடைபெற வைப்பதோடு, பொடுகுத் தொல்லை மற்றும் சரும நோய்களை தடுக்கும். இந்த ஜிங்க் சத்துக்கள் ஆண்களுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனென்றால் அந்த சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், அவை ஆண்களின் டெஸ்ட்ரோஜென்னின் அளவை சரியாக வைக்க உதவும். சொல்லப்போனால், இந்த சத்துக்கள் அசைவ உணவுகளில் அதிகம் கிடைக்கும்.

ஆனால் சைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு அந்த அளவு சத்துக்களை சைவ உணவுகளில் பெற முடியாது. ஆனால் ஒரு சில சைவ உணவுகளில் இந்த சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

அந்த உணவுகளை சாப்பிட்டால், நிச்சயம் ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்களை பெறலாம்.

இப்போது ஜிங்க் சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதை உணவில் சேர்த்து, பயன் பெறுங்கள்.

பூசணிக்காய் விதைகள் பூசணிக்காய் விதைகளை வைத்து நிறைய ஸ்நாக்ஸ்கள் உள்ளன. எனவே இந்த வகையான ஸ்நாக்ஸ்களை வாங்கி சாப்பிட்டால், உடலுக்கு ஜிங்க் சத்துக்கள் கிடைப்பதோடு, குறைவான கலோரியும், 0% கொழுப்பும் இருப்பதால், உடல் எடை அதிகரிக்காமலும் இருக்கும் .

சூப்பர் உணவுகளில் ஒன்றான காளானிலும் ஜிங்க் சத்துள்ளது. எனவே இதனை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

விதைகளில் ஒன்றான ஆளி விதையிலும் ஜிங்க் உள்ளது. இந்த விதைகளில் ஜிங்க் மட்டுமின்றி, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டும் உள்ளது.

பருப்பு வகைகளில் ஒன்றான காராமணியில் நிறைய புரோட்டீன் மற்றும் ஜிங்க் சத்து உள்ளது. ஆனால் அதே சமயம், அதிக கொழுப்புக்களும் அதிகமாக உள்ளன. எனவே இந்த உணவை எப்போதாவது சாப்பிடுவது நல்லது.

ஜிங்க் சத்தானது உடலுக்கு தேவையான வலுவை வளங்கி விந்தணுவை அதிகரிக்க உதவி செய்கிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கியை அதிகரிப்பதற்கான சூப்பர் ஃபுட் என்று முட்டைகள் என்று சொல்லலாம். முட்டைகளில் வைட்டமின் ஈ மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது விந்தணுக்களின் இயக்கத்துக்கு உதவுகிறது.அவ்வபோது உணவில் முட்டை சேர்த்துவருவதன் மூலம் இது விந்தணுக்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. இது கருத்தரித்தல் வாய்ப்பை ஊக்குவிக்கிறது.முட்டைகள் துத்தநாகத்தின் வளமான மூலம் ஆகும். இது விந்தணுக்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அவ்வபோது முட்டையை சேர்த்து கொள்வது நல்லது.

 

விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான உணவில் அன்றாட ஒரு வாழைப்பழமும் போதுமானது. வாழைப்பழத்தில் வைட்டமின்கள் பி 1 மற்றூம் வைட்டமின் சி மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது விந்தணுக்களின் இயக்கத்தை அதிகரிக்க செய்கிறது. விந்து உற்பத்திக்கு உதவுகிறது.வாழைப்பழத்தில் உள்ள ப்ரோம்லைன் என்னும் அரிய நொதியும் உள்ளது. இது விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதன் செயல்பாட்டையும் அதிகரிக்க உதவுகிறது. பாலியல் வாழ்க்கையில் குறைபாடில்லாமல் இருக்க தினமும் ஒரு வாழைப்பழம் எடுத்துகொள்ளுங்கள்.

புற்றுநோயை தடுக்க உதவுவதற்கு பூண்டு உதவும் என்பதை அறிவோம். பூண்டு விந்தணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் அலிசின் விந்தணுக்களின் சரியான பகுதிக்கு இரத்த ஓட்டத்தை தூண்டுவதற்கு உதவுகிறது. இரத்த ஓட்டம் பாலியல் உறுப்புகளுக்கு சீராக பாயும். அதோடு அங்கு எந்த சேதத்தையும் உருவாக்காமல் பாதுகாக்கும்.பூண்டில் காணப்படும் மற்றொரு முக்கியமான நொதியான செலினியமும் விந்து இயக்கத்தில் மேம்படுத்த உதவுகிறது. அதனால் வாரம் இருமுறை பூண்டு பால், உணவிலும் பூண்டு அதிகமாக சேர்த்துகொள்வது நல்லது.

 

கீரைகள் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யும் என்று சொல்வார்கள். இது ஆண்களின் விந்தணுக்கள் வீரியத்தையும் ஊக்குவிக்க செய்கிறது. கீரையில் இருக்கும் ஃபோலிக் அமிலம் விந்தணுக்களின் வளர்ச்சிக்கு அவசியமானது.மோசமான உணவு பழக்கங்களால் விந்தணுக்கள் பாதிக்கப்படும் நிலையில் இந்த ஆரோக்கியமான கீரைகள் விந்தணுக்களின் வீரியத்தையும், அளவையும் அதிகரிக்க செய்யும்.

ஆண்களுக்கு அசைவ உணவுகளில் ஆர்வம் இருந்தால் அவர்களுக்கு ஓய்ஸ்டர்ஸ் (சிப்பிகள்) என்னும் கடல் உணவு உதவும். இது விந்து இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் கிளைக்கோஜன் மற்றும் டாரைன் உள்ளது. இது இனப்பெருக்க அமைப்பை தூண்டும் பணியை செய்கிறது.

Trending News

Latest News

You May Like