1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இன்றும் கிராமப்புறங்களில் இந்த அரிசியை தான் சாப்பிட்டு வருகிறார்கள்..!

1

கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால் அதில் செலினியம் உள்ளதால் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்ககூடிய தன்மை உள்ளது.இன்றும் கிராமப்புறங்களில் கைக்குத்தல் அரிசியை கொண்டு சமைத்து சாப்பிட்டு நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்கின்றனர். இந்த கைக்குத்தல் அரிசி சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கைக்குத்தல் அரிசியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் இரண்டு வகை நீரிழிவு நோயை சீராக காத்துக்கொள்ள கைக்குத்தல் அரிசி பயனுள்ளதாக இருக்கிறது.

பல ஆராய்ச்சியின் மூலம் தினமும் கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் ஆஸ்துமா நோயை குறைக்கிறது. மேலும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது. இவற்றை தினமும் சாப்பிட்டால் பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாகுவதை தடுக்க உதவுகிறது.
 
கைக்குத்தல் அரிசியில் 21% மெக்னீசியம் உள்ளதால் தினமும் ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசிச்சோறு சாப்பிடுவதால் நம் எலும்புகள் மிகவும் பலமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது.
 
இரத்தக் குழலில் பிளேக் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். இதனால் இதய நோய் வருவதை குரைக்க முடியும் என்றும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
கைக்குத்தல் அரிசியின் தவிட்டில் கிடைக்கும் எண்ணெய், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்று அறியப்படுகிறது. இந்த அரிசியில் எல்டிஎல் (LDL) கொழுப்பை குறைக்க உதவும் நார்ச்சத்து உள்ளது.

மலச்சிக்கல்

இன்று பலரும் நார்ச்சத்து இல்லாத, கொழுப்பு அதிகம் நிறைந்த மாமிச உணவுகளை சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது மலச்சிக்கல் பிரச்சனை உண்டாக்குகிறது. தினமும் நார்ச்சத்து மிகுந்த கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

ஊட்டச்சத்து

நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் கை குத்தல் அரிசியில் நிறைந்துள்ளது. வாரத்திற்கு மூன்று அல்லாது நான்கு முறை கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது.

இதயம்

உடலில் உயிர் இருப்பதற்கும், அனைத்து உடல்பாகங்களும் சீராக இயங்குவதற்கும் அவசியமான ஒரு உறுப்பாக இதயம் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இதயம் நலமாக இருக்க சத்துமிக்க உணவுகளை சாப்பிட்டு வருவது அவசியம். நார்ச்சத்து மிகுந்த கை குத்தல் அரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. குறைந்த பட்சம் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை கை குத்தல் அரிசி உணவுகளை சாப்பிடுவதால் இதயம் நலம் மேம்படும்.

உடல் எடை குறைப்பு

இன்றைய காலத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை அதீத உடல் எடை. இதற்கு நார்ச்சத்து அதிகம் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் கை குத்தல் அரிசியில் அதிகம் நிறைந்துள்ளன. தினந்தோறும் ஒரு வேளையாவது கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும். உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

குடல் புற்று

இன்று உலகில் பெரும்பாலான மக்கள் ரசாயனங்கள் கலந்த செயற்கை உணவுகளையே அதிகம் உண்ணுகின்றனர். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடல் புற்று. கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

பித்த பை கற்கள்

நச்சுகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிலருக்கு பித்த பைகளில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. கை குத்தல் அரிசியில் பொட்டாசியம் சத்து அதிகமுள்ளது. இந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வரும் போது உடலில் பித்தபையில் நச்சுகள் மற்றும் இதர கழிவுகள் சேர்வதை தடுத்து பித்த பை கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.

1 கப் கைக்குத்தல் அரிசியில் 10-ற்கும் மேற்பட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது.

  • பாஸ்பரஸ்
  • துத்தநாகம்
  • மெக்னீசியம்
  • கலோரிகள்
  • புரதம்
  • தாமிரம்
  • மாங்கனீசு
  • செலினியம்
  • கொழுப்புசத்து
  • தியாமின்
  • நியாசின்
  • இரும்புசத்து
  • கார்போஹைட்ரேட்
  • நார்ச்சத்து
  • தாமிரம்

Trending News

Latest News

You May Like