1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இந்த உணவுகளை சாப்பிடுவதால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுமாம்..!

1

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கக்கூடியது இந்த இனிப்பு உணவுகள் தான். சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ், கேக், ஜூஸ் வகைகள் போன்றவற்றில் இனிப்பு அதிக அளவில் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இவற்றை நாம் அதிகமாக உட்கொள்ளும் போது இதய நோய்களுக்கு வழி வகுக்கிறது.நீரிழிவு பிரச்னையை அதிகரிக்க செய்கிறது. கொழுப்பு சத்தை அதிகப்படுத்தி உடல் பருமனை அதிகமாக்குகிறது. அதிக பசி உணர்வை தூண்டுகிறது. மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.

மக்கள் அதிகம் விரும்பி ருசித்து சாப்பிட கூடிய கேக், ரொட்டிகள், பரோட்டா, பர்கர், நூடுல்ஸ் போன்றவை அனைத்தும் உடலுக்கு தேவையான எந்தவித சத்துக்களும் இல்லாத இந்த மைதா மாவை கொண்டு தான் தயாரிக்கிறார்கள்.கோதுமை மாவிலிருந்து நல்ல சத்துக்களை அகற்றி சுத்திகரித்து ரசாயண பொருட்கள் சேர்த்து வெண்மையாக்கி மைதா மாவை உருவாக்குகிறார்கள்.இதை தான் சுத்திகரிக்கப்பட்ட மாவு என்று கூறுகிறார்கள். 
பல ரசாயன பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த மைதா மாவால் உடலுக்கு எந்த விதமான நன்மையும் கிடைப்பதில்லை. மாறாக தீமைகள் தான் விளைகிறது. ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. கால்சியம் சத்தை அகற்றி எலும்பை அரித்து விடுகிறது. செரிமான பிரச்சனைகளை உருவாக்குகிறது. பெண்களுக்கு ஹார்மோன் சம்மந்தப்பட்ட தொந்தரவு ஏற்படுகிறது. குறிப்பாக மைதா மாவில் உள்ள ஊட்டச்சத்தின் அளவு பூஜ்யம் ஆகும்.

எண்ணெயின் இயற்கையான வெப்பநிலையை மாற்றி சுத்திகரிப்பு என்ற பெயரில், இருக்கக்கூடிய அனைத்து சத்துக்களையும் நீக்கி, வெளித்தோற்றத்திற்கு சுத்தமாக கண்ணாடி போன்று பளபளப்பாக இருக்கும் வகையில் உருவாக்கக்கூடிய இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயால் செய்த உணவுகளை சாப்பிடுவதால் எந்த பலனும் உடலுக்கு கிடைப்பதில்லை.இந்த வகை எண்ணெயால் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டால் இதயக்கோளாறு, பெண்களிடையே மலட்டுத்தன்மை, நீரிழிவு, அல்சைமர் போன்ற நோய்கள் உருவாகி நோய் எதிர்ப்பு சக்தியை பாதித்து உடலின் ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடுகிறது.

மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். தொடர்ந்து மது அருந்துவதால் ஏற்படும் தீமைகளின் பட்டியல் வரிசையை அடுக்கிக் கொண்டே போகலாம்.புற்றுநோய், ரத்த அழுத்தம், வாதம், நரம்பு தளர்ச்சி, நினைவிழத்தல், உடல் நடுக்கம், மூளை செயல்பாட்டில் பாதிப்பு, உடலில் பல பகுதிகளில் உள்ள ரத்த நாளங்கள் மற்றும் சுரப்பிகளை செயலிழக்க செய்தல் என எண்ணற்ற தீமைகள் உருவாகுவதற்கு காரணமாகிறது.இவ்வாறு உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து விடுகிறது.

காபி குடிப்பது தவறான விஷயம் இல்லை. ஆனால் அளவுக்கு மீறும் பொழுதான் ஆபத்தில் முடிகிறது. இன்று பலரும் காபி குடித்து தான் நாளையே தொடங்குகிறார்கள்.இரண்டு மூன்று கப்பிற்கு அதிகமாக காபி குடிக்கும் போது இதய ரத்த நாள பிரச்சனை உருவாகிறது. மேலும் மன நலத்தை பாதிக்கும்.தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். தசை முறிவை ஏற்படுத்துகிறது. அதிகமாக காபி குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வழி வகுக்கும்.
உடல் பருமன் உடையவர்கள் சிறுநீர் அடங்காமை பிரச்னையை சந்திக்கின்றனர். இது இருதய நோய் ஆபத்தை 22 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இருதய நோய் தான் மரணத்திற்கான முக்கிய ஒன்றாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இன்றைய காலத்தில் மீந்து போன சாப்பாடு குளிர்சாதன பெட்டிக்குள் தஞ்சமடைகிறது. அன்றே சமைத்து அன்றே சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.வேலை பழு, நேரமின்மை போன்ற இந்த அவசர காலத்தில் நேற்றைய உணவை பத்திரமாக எடுத்து பிரிட்ஜ்-இல் வைத்து மறுநாள் சாப்பிடுகிறோம். இந்த பழக்கம் தொடரும் போது வயிற்று போக்கு, வாந்தி, குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனை, தோல் நோய் உள்ளிட்ட பல தீமைகள் ஏற்படுகிறது.நமக்கே தெரியாமல் நம் உடலில் நஞ்சானது சிறிது சிறிதாக சேர்ந்து மிக பெரிய நோய் அறிகுறிகளை உருவாக்கும்.

பழைய மீன் குழம்பு ருசிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இந்த உணவால் உடலுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பதில் தெளிவாக இருத்தல் அவசியமாகும்.அசைவ உணவுகளை பதப்படுத்தி சாப்பிடும் பொழுது அதிகப்படியான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. கெட்டுபோன அசைவ உணவில் எண்ணற்ற கிருமிகள் மறைந்திருக்கும். அதை நாம் உட்கொள்ளும் பொழுது பாக்டீரியாவும் பூஞ்சைகளும் உடலுக்குள் எளிதாக நுழைகிறது.

Trending News

Latest News

You May Like