1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? . தினம் ஒரு சீதாபழம் சாப்பிடுவதால்...

1

வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ள பழம் தான் சீத்தாப்பழம். இவ்வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை நீக்கும். இதுப்போக உங்களை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், மெக்னீஷியம், இரும்பு, நியாசின் மற்றும் பொட்டாசியமும் இதில் அடங்கியுள்ளது. இந்த பழத்தில், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் உடலில் சேராது என்கிறார்கள். நினைவுத்திறனை அதிகப்படுத்தக்கூடியது என்பதால், வளரும் குழந்தைகள் இந்த பழத்தை தவிர்க்ககூடாது.

உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது தொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறைகளாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும்.

இயற்கையான உணவுகளைக் கொண்டு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என்று பேசும் போது, சீத்தாப்பழம் அந்த உணவுப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும். உண்மையில், சீத்தாப்பழத்திற்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் உள்ளன. எண்ணற்ற விதைகளை கொண்டுள்ள இந்த ஆப்பிளுக்கு இணையான பலன்கள் வேறெங்கும் இல்லையென்றும் சொல்ல முடியும். புற்றுநோயை எதிர்க்கும் அக்சிடோஜெனின்களை பெருமளவு கொண்டிருக்கும் உணவாக உள்ளது சீத்தாப்பழம்.

சர்க்கரை நோய்க்கு எதிரான குணங்கள்
சீத்தாப்பழத்தில் சர்க்கரை நோய்க்கு எதிரான குணங்கள் உள்ளன. இந்த குறிப்பிட்ட குணம் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தி, தசைகளுக்கு குளுக்கோஸ் சென்றடையும் வழிகளை மேம்படுத்துகிறது. உடலில் குளுக்கோஸ் பயன்படும் செயல்பாட்டை இந்த குணம் தான் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

அசிடிட்டி:
அசிடிட்டி, அல்சர் இருப்பவர்களுக்கு சீதாபழம் நல்ல மருந்தாக விளங்குகிறது. அதனால், காலையில் வெறும் வயிற்றில் சீதாபழத்தினை சாப்பிடுவதால், வயிற்றிலிருக்கும் அமிலத்தன்மையை சீராகும். வயிற்றில் புண்களை ஏற்படுத்தாது. அல்சர் புண்களால் அவதிப்படுபவர்கள், சிறிது வெந்தயத்தை ஊற வைத்து, அதை சீதாப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டாலே குடல் புண்கள் ஆறிவிடும்.

அதிக அளவு வைட்டமின் சி
உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உடலிலுள்ள வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுப்படுத்த முடியும். சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி நிறைய உள்ளதால், இதை சாப்பிடுவதால், மருந்துகளை சாப்பிடுவதை விட அதிகமான பலன் கிடைக்கும். இதன் மூலம் மிகவும் எளிதாக, இயற்கையான வழிமுறையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், விரட்டிடவும் முடியும்.

காபி, டீ அதிகம் குடிப்பவர்களுக்கு உடலில் பித்தம் சேர்ந்துவிடும். அப்படியிருந்தால், சீதாபழத்துடன், சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டாலே பித்தம் பறந்துவிடும். சீதாபழத்தில், கால்சியம், மெக்னீசியம் இரண்டுமே இருப்பதால், மன பதற்றத்தையும், படபடப்பையும் நீக்கி, மன அழுத்தத்தை சரி செய்கிறது.. குளுக்கோஸ் உள்ளதால், உடல் களைப்பை போக்குகிறது.. இதனால் நிம்மதியான தூக்கத்தையும் பெறலாம்.

உடலில் சருமத்துக்கு பாதுகாப்பை தருகிறது சீதாபழம். தினம் ஒரு சீதாபழம் சாப்பிடுவதால், சரும வறட்சி நீங்குவதுடன், சருமமும் ஆரோக்கியம் பெறுகிறது. கர்ப்பிணிகள் இந்த பழத்தை டாக்டர்களின் ஆலோசனையை பெற்று தாராளமாகவே சாப்பிடலாம். காரணம், சீதாபழத்துடன், குங்குமப்பூ சேர்த்து சாப்பிடுவால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பார்கள். பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும், வலிமையுடன் நல்ல நிலைமையில் இருக்குமாம்.

Custard apple

கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீதாப்பழத்தை சாப்பிடலாம். ஆனால், காயாக இருக்கும்போதுதான் சாப்பிட வேண்டுமாம். இதனால் அதிக பலன்கள் கிடைப்பாக சொல்கிறார்கள். சீதாபழம் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, கண்கள் சம்பந்தமான பிரச்சனைகள் வருவதில்லை. டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்றவற்றையும் ஒழிக்கிறது. கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், எலும்புகளை உறுதிப்படுத்துகிறது இந்த சீதாபழம்.

Cancer

புற்றுநோய்:

புற்றுநோய்க்கு சீதாப்பழம் மட்டுமல்ல, சீதாபழங்களின் இலைகளும் மருந்தாக பயன்படுகிறது. காரணம், இதன் இலைகளிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், உடலிலிருக்கும் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து புற்றுநோய் செல்களுடன் போராடும் சக்தியை தருகிறது. அதனால், சீத்தப்பழ இலைகள் ஒருவரின் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை பெரிதும் தடுக்கிறதாம்.

உடலில் காயங்கள், புண்கள், அலர்ஜி தழும்புகள், கொப்புளங்கள் ஏற்பட்டு விட்டால், இந்த இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டு வந்தால் புண்கள் மெல்ல ஆறத்துவங்கும்.

Trending News

Latest News

You May Like