1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வாரம் ஒருமுறை ஆட்டு தலைக்கறி சாப்பிடுவதால்...

1

மட்டனை எப்படி சமைக்கிறோம் என்பதில்தான் ஆரோக்கியம் அடங்கி உள்ளது. குறைவான எண்ணெய்யில் வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது கிரேவியாகவோ அல்லது சூப்பாகவே செய்து சாப்பிட்டால், சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும். ஆனால், மட்டன் சாப்பிடும்போது கண்டிப்பாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்..

ஆண்களுக்கு 40 கிராமும், பெண்களுக்கு 30 கிராம் நார்ச்சத்தும் எடுத்தே ஆக வேண்டுமாம். அதனால், கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், காலி பிளவர், தோல் இருக்கும் உருளைக்கிழங்கு போன்றவைகளுடன் சேர்த்து மட்டன் சமைக்கும்போது, மட்டனில் உள்ள கொழுப்புக்கள் உறிஞ்சப்பட்டுவிடும்..

பிறகு, வெங்காயம் + தக்காளி போன்றவைகளை சாலட் போலவும் சேர்த்து சாப்பிட வேண்டும்.. காரணம், இந்த நார்ச்சத்துக்கள் மட்டனுடன் இணைந்து வேகமாக கொழுப்பை எரித்துவிடும்.. இந்த ஆட்டுக்கறியில், ஒரு சிலருக்கு தலைக்கறி மிகவும் பிடித்த உணவாக இருக்கும்.. இட்லி, தோசைக்காக, தேங்காய் பாலில் சமைத்து சாப்பிடுவார்கள்.. சிலர் தேங்காய் ஊற்றாமலும், செய்வார்கள். எப்படி சாப்பிட்டாலும், அதிக சுவையை தரக்கூடியது இந்த தலைக்கறி.

ஆனால், தலைக்கறி பெரும்பாலானோரால் விரும்பப்படுவது இல்லை.. காரணம், அதனை சமைக்கும் பக்குவம் என்பது சற்று சிரமமானது. ஆனால், அதற்குள் நிறைய நன்மைகள் ஒளிந்து கிடக்கின்றன.. ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது. அந்தவகையில், ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும்.. இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு முக்கிய இடம் உண்டு என்கிறார்கள்.. அதேபோல,நம்முடைய தலை பகுதியில் இருக்கும் எலும்பு வலுப்படுகிறது.. பார்வை கோளாறுகள் சரியாகும்.. கண்களுக்கு கூடுதல் வலிமை கிடைக்கிறது.

ஆட்டின் தலைக்கறியில் பல சத்துக்கள் உள்ளதால், இதை உட்கொள்ளும் போது பலவிதமான பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது வாரம் ஒருமுறை ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம். 

1. இதய நோய் தடுக்கப்படும் 

ஆட்டின் தலைக்கறியை சமைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்கள் இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு அழற்சியின் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், வாரம் ஒருமுறை ஆட்டு தலைக்கறியை சமைத்து சாப்பிடுங்கள். 

2. புற்றுநோய் தடுக்கப்படும் 

ஆட்டுத் தலைக்கறியில் CLA என்னும் இணைந்த லினோலிக் அமிலம் அதிகளவில் உள்ளன. இது புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, உடலினுள் ஏற்படும் பல அழற்சிகளைத் தடுக்கும். ஆகவே புற்றுநோய் வரக்கூடாதெனில், ஆட்டு தலைக்கறியை அவ்வப்போது சமைத்து சாப்பிடுங்கள்.

3. இரத்த சோகை தடுக்கப்படும் ஆட்டு தலைக்கறியில் அதிகளவில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் லீன் புரோட்டீன்கள் உள்ளன. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதோடு, இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆகவே உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள், ஆட்டு தலைக்கறியை அடிக்கடி சமைத்து சாப்பிடும் போது, இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகை தடுக்கப்படும்.

 4. பிறப்பு குறைபாடுகளை குறைக்கும் கர்ப்பிணிப் பெண்கள் ஆட்டு தலைக்கறியை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் கர்ப்பிணிகள் ஆட்டு தலைக்கறியை சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்கள் பிறப்பு குறைபாட்டின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும், எவ்வித குறையும் இல்லாமல் பிறக்கும். 

5. மாதவிடாய் வலி குறையும் பெண்கள் ஆட்டு தலைக்கறியை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியை சந்திக்கும் பெண்கள் ஆட்டு தலைக்கறியை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

6. பிற நன்மைகள் கூடுதலாக, ஆட்டுத் தலைக்கறியை வாரம் ஒருமுறையாவது உட்கொண்டு வந்தால் மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். மேலும் சரும ஆரோக்கியம் மேம்படும். முக்கியமாக சிறுநீரக நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை தடுக்கப்படும். எனவே இதுவரை நீங்கள் ஆட்டு தலைக்கறியை சாப்பிடாமல் இருந்தால், இனிமேல் சாப்பிட்டு, அதன் பலனைப் பெறுங்கள்.

தவிர்க்கலாம்: எனினும், அதிக அளவு தலைக்கறியை சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாம்.. அதேபோல, மது அருந்தி விட்டு, ஆட்டிறைச்சி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஆரோக்கியமான ஆட்டின் அனைத்து பாகங்களும், அசைவ பிரியர்கள் சாப்பிடக்கூடியவையே.. நன்கு வேகவைக்கப்பட்ட சாப்பாட்டில் எந்த கெடுதலும் இல்லை.. ஆனாலும், அளவுக்கு மிஞ்சினால் எதுவானாலும் நஞ்சுதானே..!!!

குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறி குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தை பெற்றவர்கள் இடுப்புவலிக்கு நல்ல தீர்வாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பால் சுரப்பும் அதிகமாக இருக்கும். அசைவ உணவான ஆட்டிறைச்சியானது, நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது. இதில், பல்வேறு மருத்துவ பலன்களும் உள்ளது. எனவே ஆட்டு இறைச்சி சாப்பிடும் போது, சதை இறைச்சியை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதனுடைய உறுப்பு இறைச்சியையும் சேர்த்து சாப்பிட வேண்டும்வாரத்திற்கு ஒரு முறையாவதுஆட்டின் தலை கறியில் குழம்பு வைத்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் அவர்களின்உடல் வளர்ச்சிக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாக இருக்கும். இந்த தலைக்கறி குழம்பை எவ்வாறுபாட்டி கைப்பக்குவத்தில் சுவையாக செய்யலாம் என்பதைப் பற்றி தான் தெளிவாக தெரிந்து கொள்ளபோகிறோம்.

Ingredients:

  • 1 ஆட்டுதலை
  • 3 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 4 பச்சை மிளகாய்
  • 4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 மஞ்சள்தூள்
  • எண்ணெய்
  • 2 ஏலக்காய்
  • 3 கிராம்பு
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. கறியை சுத்தம் செய்யவும். மூளையை மட்டும் தனியே எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  2. பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் இப்போது தூள் வகைகளை சேர்த்து நன்கு கிளறவும்
  3. பின் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும். பின் கறியை சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து குக்கரில் 2 விசிலுக்கு வைக்கவும்.
  4. பின்னர் மூளையை (முதலிலேயே மூளையை சேர்ப்பதால் கரைந்து விடும்) சேர்த்து சிம்மில் வைத்து ருக்கரை மூடாமல் வேகவிடவும்
  5. தலைக்கறி கிரேவி தயார்.

Trending News

Latest News

You May Like