இது தெரியுமா ? தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதால்...
நெல்லிக்காய் ஒரு ஆப்பிளுக்கு சமம் என்பது மட்டுமல்ல, ஒரு நெல்லிக்காய் ஒரு சொட்டு ரத்தத்திற்கு உத்திரவாதம் தரும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்கு பெரும்.
அற்புத சத்துக்களைக் கொண்ட நெல்லிக்காயையும், தேனையும் கலந்து சாப்பிட்டால் வந்தால் எத்தனை நன்மைகள் கிடைக்கும். தேனில் ஊற வைத்து நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் பலவித நன்மைகள் பெறலாம்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அத்தகைய பெண்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம். கர்ப்ப்பாய் பாதிப்புகள் நீங்கி சீரான மாதவிலக்கு உண்டாகும்.
தேனில் நெல்லிக்காயை ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, அப்பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடும்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால் சுருக்கங்கள் மறைந்து முகத்தின் பொலிவு அதிகரிக்கும். சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.
முடி பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது வரப்பிரசாதம். நெல்லிக்காய் மற்றும் தேனில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால், இதுவரை அதிகமாக இருந்த முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.