1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வயிற்றுப்புண் உள்ளோர் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வெள்ளரி...

1

வெள்ளரிக்காய் ஒரு காய் அல்ல அது ஒரு பழம். வெள்ளரிக்காயில் நிறைய ஊட்டச்சத்துக்களும், நீர்ச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இது சரியான நீரேற்றத்திற்கும் எடை இழப்பிற்கும் உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் வெள்ளரிக்காயை சாப்பிடுவது உங்களை புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது.

நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு வெள்ளரிக்காய் வீதம் சாப்பிட்டு வருவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ

வெள்ளரிக்காய். அப்படியே உண்ணத் துாண்டும் வகையில் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. வெள்ளரியில் உள்ள நீர் சத்து, நாக்கு வறட்சியை போக்குவதுடன், பசியை உண்டாக்கும்

 சிறுநீர் பிரிவை துாண்டச் செய்யும். இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப்படுத்தக் கூடியது. பித்த நீர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளையும் குணமாக்குகிறது

கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்வதில் சிறந்த உணவாகத் திகழ்கிறது. 100 கிராம் வெள்ளரிக்காயில், 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது

சாதாரணமாக, வெள்ளரிக்காயை பச்சையாக கடித்துச் சாப்பிடுவது வழக்கம். இளநீரை போன்றே, வெள்ளரிக்காய்ச் சாறும் திகழ்கிறது. வயிற்றுப்புண் உள்ளோர், இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை, ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால், வயிற்றுப்புண் குணமாகும்

காலரா நோயாளிகள், வெள்ளரிக் கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, மணிக்கு ஒருமுறை, இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்

வறண்ட தோல் மற்றும் முக வறட்சி உள்ளோர், தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வந்தால், வறட்சித் தன்மையை போக்கும்

 நோய் எதிர்ப்பு சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும். நீரிழிவு நோயாளிகள், எடை குறைய, விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும்

வெள்ளரியில், தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன் மற்றும் குளோரின் உள்ளது. ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டை தணிக்கிறது.

நம்மில் பெரும்பாலனோர் ஒவ்வொரு நாளும் போதுமான தண்ணீரை குடிப்பதில்லை. குறிப்பாக நாம் வேலையில் பிஸியாக இருக்கும் போது தண்ணீர் எடுத்துக் கொள்வதையே மறந்து விடுகிறோம். நீர் நம் உடலுக்கு அவசியமான ஒன்று. இது தான் வெப்பநிலை கட்டுப்பாடு, வளர்சிதை மாற்றம், உடல் செயல்திறன் மற்றும் கழிவுகளை அகற்றுவதில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நாள்பட்ட குறைந்த அளவிலான நீரிழப்பு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தீவிரமாக பாதிக்கும்.

வெள்ளரி போன்ற நீர் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உணவில் அதிக தண்ணீரைப் பெறலாம். அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளில் கணிசமான அளவு தண்ணீர் உள்ளது. அதுவே வெள்ளரிக்காயில் 96 %தண்ணீர் சத்து காணப்படுகிறது. இது உங்க நீரேற்று தேவையை பூர்த்தி செய்ய உதவும். உங்கள் அன்றாட நீரேற்றம் தேவைகளில் 40% வரை உணவில் இருந்து பெறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது.எனவே தினந்தோறும் ஒரு வெள்ளரிக்காய் என சாப்பிட்டு வாருங்கள்.

வெள்ளரிக்காய் உங்க எடை இழப்பை சாத்தியம் ஆக்குகிறது. நீங்கள் சர்க்கரை அளவை எடுத்துக் கொள்வதை குறைக்கிறது. இவற்றில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. இதனால் வெள்ளரி சாப்பிடுவது பசியை தணிக்கும்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முழு வெள்ளரிக்காயை சாப்பிட்டால் நீங்கள் 45 கலோரிகளை மட்டுமே எடுத்துக்கொள்வீர்கள்  புரதம், வைட்டமின் சி, வைட்டமின் கே, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துக்களையும் பெற முடியும்.அதிக நீர் நிறைந்த உணவைக் கொண்ட உணவை உட்கொள்வது உடல் நிறை கணிசமாகக் குறைக்கப்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

நிறைய பேருக்கு காலையில் எழுந்ததும் மலச்சிக்கல் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. மன அழுத்தம், நீரிழப்பு மற்றும் மோசமான உணவு உள்ளிட்ட பல விஷயங்கள் மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றன. தினசரி வெள்ளரிக்காய் சாப்பிடுவது உங்க மலச்சிக்கலை போக்குமாம். அதில் நிறைய தண்ணீர் உள்ளது, இது மலத்தை மென்மையாக்கவும், எளிதில் வெளியேற்றவும் உதவுகிறது.

வெள்ளரிகளில் குறிப்பிட்ட வகை பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இந்த பெக்டின் மலத்தை இலகுவாக்குகிறது. குடல் தசைகளின் இயக்கத்தை விரைவுபடுத்துகிறது. செரிமானத்தை அதிகரிக்க குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது.

Trending News

Latest News

You May Like