இது தெரியுமா ? எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாது என்று நினைத்தால் வாரம் ஒருமுறை இதை சாப்பிடுங்கள்..!
ஆட்டு ஈரலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, காப்பர், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. ஒரு வேளை ஆட்டு ஈரலை சாப்பிட்டால், ஒரு நாளைக்கு வேண்டிய சத்து அனைத்துக்களையும் பெற முடியும். முக்கியமாக ஆட்டு ஈரலை அடிக்கடி உட்கொண்டு வந்தால், எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுகளும் ஏற்படாது.
ஆட்டு ஈரலில் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலங்கள் நிறைந்திருப்பதால் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்யக்கூடியது, புதிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதால் ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
ஆட்டு ஈரலில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளன. எனவே ஏற்கனவே இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்டு ஈரலை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். வாரம் ஒருமுறை ஆட்டு ஈரலை சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தம் நன்கு ஊறி, இரத்த சோகையில் அபாயம் குறையும்.
ஆட்டு ஈரலில் வைட்டமின் கே அதிகமாக உள்ளன. இது எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் வலிமைக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் வைட்டமின் கே தான் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவி புரிகின்றன. எனவே எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாது என்று நினைத்தால் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், ஆட்டு ஈரலை வாரம் ஒருமுறை சாப்பிடுங்கள்.
ஆட்டு ஈரலில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளன. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவுகிறது. பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களிலும் வைட்டமின் ஏ உள்ளன. ஏனெனில் அழகான சருமத்திற்கு இச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே நீங்கள் அழகாக காட்சியளிக்க விரும்பினால் ஆட்டு ஈரலை அடிக்கடி சாப்பிடுங்கள்.
கண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ மிகவும் இன்றியமையாத சத்தாகும். இந்த வைட்டமின் ஏ ஆட்டு ஈரலில் அதிகமாக உள்ளன. எனவே கண்கள் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாது மற்றும் கண் பார்வை சிறப்பாக இருக்க வேண்டுமானால், அடிக்கடி ஆட்டு ஈரலை சாப்பிடுங்கள்.
கர்ப்பிணிகள் வாரத்திற்கு ஒருமுறையாவது இதனை உட்கொண்டு வருவது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும், இதனால் கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் உடல் தசைகளை வலிமையடைய செய்வதுடன், எலும்புகளை பலப்படுத்துகிறது.
உடல் மெலிந்து பலமில்லாமல் இருப்பவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை ஆட்டு ஈரலை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம், உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால் சோர்வை போக்கும், மிக முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.