1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினமும் இரவில் 1 டம்ளர் பால் குடிப்பதால்...

1

எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.

பால் கால்சியம் , சோடியம் , புரோட்டீன் வைட்டமின் A, K மற்றும் B12, கொழுப்பு, அமினோ ஆசிட், ஆண்டி ஆக்ஸிடண்ட் என பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. என்பதால் ஆயுர்வேத குறிப்புகளின்படி இரவு பால் குடிப்பது நல்லது என்கின்றனர். வெறும் பாலாக அல்லாமல் அதில் இஞ்சி, ஏலக்காய், மஞ்சள் கலந்து கொதிக்க வைத்துக் குடித்தால் இரவு தூக்கம் நிம்மதியாக இருக்கும் என்கிறது. அதேசமயம் பாலில் உள்ள அமினோ ஆசிட் இரவு குறட்டை விடும் பழக்கத்தை குறைக்க உதவும் என்கிறது.

அதேபோல் அது நார்ச்சத்து கொண்டது என்பதால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் நல்லது என்கிறது ஆயுர்வேதம்.

ஆனால் மருத்துவர்களோ இரவு பால் குடிப்பது நல்லதல்ல என்கின்றனர். ஏனெனில் பாலில் உள்ள லாக்டோஸ் சற்று சர்க்கரை நிறைந்தது. எனவே இரவு படுக்கைக்கு முன் குடிப்பது நல்லதல்ல. அதோடு நுரையீரல் இரவு நேரத்தில்தான் நச்சு நீக்கி வேலைகளை செய்யும். அந்த சமயத்தில் ஹெவியான பால் அருந்துவிட்டு படுக்கும்போது அதன் வேலையை மடைமாற்றம் செய்வதாக இருக்கும். பின் அது நச்சு நீக்கம் செய்யாமல் அருந்திய பாலை செரிமாணிக்க வைத்து அதன் ஊட்டச்சத்துகளை பிரித்து அனுப்பும் வேலைகளில் இறங்கிவிடும்.

பால் குடித்தால் ஏற்றுக்கொள்கிறது என நினைப்பவர்கள் பால் குடிக்கலாம். சிலருக்கு இரவில் வெதுவெதுப்பான சூட்டில் ஏதேனும் குடித்தால்தான் தூக்கம் வரும். அவர்களும் பால் குடிக்கலாம். பாலே குடிக்கக்கூடாது... அது எடையை அதிகரிக்கும், ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்றெல்லாம் யார் யாரோ சொல்வதைக் கேட்டு நீங்கள் எந்த முடிவுக்கும் வர வேண்டாம். உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறதா என்பதுதான் முக்கியம்.

இரவு பால் குடிப்பதால் உடலில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்தால் குடிக்கலாம் அல்லது சில பக்கவிளைவுகளை அனுபவித்தால் தவிர்த்துவிடுதல் நல்லது.

காலையில் பால் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்: பால் ஜீரணமாகாது, ஜீரணமாக நேரம் எடுக்கும். அத்தகைய சூழ்நிலையில், செரிமான அமைப்பு பலவீனமாக இருப்பவர்கள் காலையில் பால் குடித்த பிறகு நாள் முழுவதும் வயிறு கனமாக இருப்பதாக புகார் கூறலாம்.

காலையில் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: பாலில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள், காலை உணவில் சேர்த்துக் கொண்டால், பல வழிகளில் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். உதாரணமாக, இது உங்கள் எலும்புகளை வலிமையாக்குகிறது. இதில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், புரதம், வைட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Trending News

Latest News

You May Like