1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? சர்க்கரை நோய் போக்க தினமும் இந்த டீ அருந்துங்க!

1

வெறும் வயிறில் காபி, டீ போன்றவற்றை அருந்துவதை விட ஏதாவது ஒரு மூலிகை பானம் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்தை மேன்மைபடுத்தும்.

அந்த வகையில் பல மருத்துவ குணங்கள் நிறைந்த ஆவாரம் பூவை பயன்படுத்தி எப்படி டீ தயாரிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த ஆவாரம் பூ டீயை சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து குடித்து வந்தால் இதிலிருந்து விடுபடலாம். மேலும் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்க‌ளு‌ம் மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கி ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் அடைய இந்த டீயை அருந்தலாம்.

தேவையான பொருட்கள்
ஆவாரம் பூ பொடி – ஒன்றரை டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
கருப்பட்டி – தேவையான அளவு
ஏலக்காய் – 2
தண்ணீர் – ஒரு கப்

செய்முறை :
முதலாவது ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடித்துக் கொள்ளவும்.

அதன்பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய விடுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து மணம் வர ஆரம்பித்து தண்ணீரின் நிறம் மாறியதும் இறக்கி வடிகட்டி பருகுங்கள். இப்படி நீங்கள் குடித்து வந்தால் சர்க்கரை நோயை எளிதில் குணப்படுத்தலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுனு இப்படி எல்லாத்துக்கும் ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு சூப்பர் மருந்து

தோல் நமைச்சல்:

ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நமைச்சல் தீரும்.

ஆவாரம் பூவோட கருப்பட்டி சேத்து மணப்பாகு செஞ்சு குடிச்சா ஆண்குறி எரிச்சல், சொப்பனஸ்கலிதம், வெள்ளைப்படுதல், மூத்திர ரோகம் குணமாகும். 

Trending News

Latest News

You May Like