1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ்களை குடித்து பாருங்க!

1

ஒவ்வொருவரும் அவர்களுக்கு நோய்வாய்ப்படாமல் பார்த்துக் கொள்ள விரும்புகிறார்கள். மருத்துவரின் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இன்று பலர் தங்கள் ஆரோக்கியத்திற்கு உதவும் இயற்கை வழிகளைத் தேர்வு செய்கிறார்கள். அதில் ஒன்று தான் காலையில் எழுந்ததும் எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் எந்த ஜூஸ் குடித்தால் என்ன ஆரோக்கிய நன்மை கிடைக்கும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாகற்காய் ஜூஸ்:

பாகற்காய் சற்று கசப்பு தன்மை கொண்ட ஒரு காய்கறி.  ஆனால் இதன் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். பசியை நிறுத்தவும், உங்கள் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றவும் விரும்புகிறீர்களா? அப்போ பாகற்காய் ஜூஸ் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இது உங்கள் வயிறு நன்றாக வேலை செய்ய உதவுவதன் மூலம் பசியை குறைக்க உதவுகிறது. 

வேப்பிலை ஜூஸ்:

இந்த ஜூஸ் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. காலையில் சாப்பிடுவதற்கு முன் வேப்பம்பூ ஜூஸ் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும் ஒரு சிறந்த பானமாகும். இந்த வேப்பிலை ஜூஸ் குடிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம் ஆனால் இதன் மருத்துவ குணங்கள் ஏராளம்.

கேரட் ஜூஸ்:

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் வைட்டமின் ஏ இருப்பதால், உங்கள் கண் பார்வை ஆரோக்கியம் அதிகரிக்கும். இதில் பீட்டா கரோட்டின் அதிகளவு இருக்கும் காரணத்தால், விரைவில் வயதாகாமல் இருக்கவும் உதவுகிறது. 

சுரைக்காய் ஜூஸ்:

தினமும் காலையில் சுரைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். சிறுநீர் கழிக்கும் போது வயிறு வலிக்கிறதா? அப்படி என்றால் காலையில் சாப்பிடுவதற்கு முன் சுரைக்காய் ஜூஸ் குடிக்கவும். இது உங்கள் வயிற்றை நன்றாக உணரவும், எளிதாக சிறுநீர் கழிக்கவும் உதவும். 

பீட்ரூட் ஜூஸ்: 

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், நம் உடலில் இரத்த ஓட்டத்தை சீர் செய்யவும் உதவுகிறது. இது நமது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவைத்தான் மூலம் இதய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க உதவும்.

அருகம்புல் ஜூஸ்:

தினசரி காலையில் அருகம்புல் சாறு குடித்து வந்தால், வயிற்றை சுத்தம் செய்து, வயிற்றில் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ளலாம். இந்த ஜூஸ் சற்று துவர்ப்பான சுவையில் தான் இருக்கும். ஆனால் இதன் ஆரோக்கிய நன்மைகள் அதிகம்.

கற்றாழை ஜூஸ்:

கற்றாழை நம் சரும அழகை மட்டும் அதிகரிக்க பயன்படுத்தாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேறி, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறைய பெரிதும் உதவுகிறது.

Trending News

Latest News

You May Like