1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தயிரையும் கருவாட்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது..!

1

பால் பொருட்களுடன் உருளைக்கிழங்கு, பீன்ஸ், இறைச்சி சாப்பிடக்கூடாது. பழங்களை தானியங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. பழங்கள், பால், இரண்டையும் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதையெல்லாம் ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது, உடல் உப்பசம், அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, தேவையில்லாத நச்சுக்கள் வயிற்றில் சேர்ந்துவிடும்.

தயிருடன் கீரைகளை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம், கீரைகளும் செரிமானம் ஆக நேரமாகும்.. இதனுடன் தயிரும் இணையும்போது, கூடுதல் மந்தத் தன்மையை உண்டுபண்ணிவிடும்.

தயிரையும் கருவாட்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.. தயிரையும் மாம்பழத்தையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.. உஷ்ணமான சாப்பாடு சாப்பிட்டதும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவை சாப்பிடக்கூடாது.. பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடக்கூடாது.. இரண்டுமே அதிக சத்துக்களை தருகிறது என்றாலும், ஒன்றாக சாப்பிடும்போது, ஜீரண உறுப்புகளை மந்தமாக்கிவிடும்..

மீன், கருவாடு சாப்பிட்டதுமே, பால், தயிர் சாப்பிட்டால், "வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக் கூடும்.. உணவுப்பொருட்களை வைத்து சில கட்டுக்கதைகள் திணிக்கப்பட்டாலும், அவைகள் உடலுக்கு எதிர்மறை விளைவுகளை உண்டு பண்ணும் என்பதே பிரதான காரணம். அல்லது சத்துக்கண் வீணாகிவிடும். இதையே தனித்தனியாக சாப்பிட்டால், சத்துக்கள் 2 மடங்காக நமக்கு கிடைக்கும்.
 

தயிர் + மீன் இவைகளையும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை தயிருக்கு உண்டு... அப்படிப்பட்ட தயிரை, சத்து அதிகமான மீனுடன் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் மேலும் மந்தமடையும்.. இதனால் சத்துக்கள் எதுவும் நமக்கு முழுமையாக கிடைக்காமலேயே போய்விடும்.. மீன், தயிர் இரண்டையும் தனித்தனியாக சாப்பிட்டால், மொத்த சத்துக்களும் நமக்கு வீணாகாமல் கிடைக்குமாம்.

நல்லெண்ணெய்யில் இறைச்சியை சமைக்கக்கூடாது.. முள்ளங்கியை மீனுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இறைச்சியுடன் வினிகரை சேர்த்து சமைக்கக்கூடாது.. பாலுடன் சாக்லெட்டை சேர்த்து சாப்பிடக்கூடாது. பீன்ஸுடன் பால், இறைச்சி, முட்டை, மீன், பழங்கள், சேர்த்து சாப்பிடக்கூடாது.

மீன் + முள்ளங்கியை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. அப்படி சாப்பிட்டால், சளி, மலசிக்கல் போன்ற உடல் உபாதைகள் உண்டாக சில வாய்ப்புகள் உண்டு... நுரையீரல் அல்லது சுவாச பாதிப்புகளுக்காக துளசி கேப்ஸ்யூல் அல்லது துளசி சாறு அருந்தியிருந்தால், அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாதாம். தேன் சாப்பிட்ட பிறகு இனிப்பு சார்ந்த உணவுகளோ சாப்பிடக் கூடாது... வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது... கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

இறைச்சி சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது அல்லது இரண்டையும் சேர்த்துக் குடிப்பது வாயு, வீக்கம், அசௌகரியம், வயிற்று வலி, குமட்டல், நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பிரச்சனைகளை கொண்டுவந்துவிடும்.. காரணம், பால் + இறைச்சி இரண்டும் புரதத்தின் ஆதாரங்கள்.. அமில ரிஃப்ளக்ஸ்க்கு வழிவகுக்கும் என்கிறார்கள்.

பால் குடித்த பிறகு மீன், கோழி அல்லது ஆட்டிறைச்சி சாப்பிட்டால், 2 வகையான புரோட்டீன்கள் ஒரே நேரத்தில் உடலுக்குள் செல்கிறது. செரிமானம் ஆவதற்கு நேரமாகும்.. அத்துடன், ஜீரணிக்க உடலை கடினமாக்கிவிடும்.. நோயெதிர்ப்பு அமைப்புகளையும் மோசமாக பாதித்துவிடும். மட்டன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக்கூடாது.. இரண்டிலுமே புரோட்டீன் உள்ளதுடன், லாக்டோஸ் சகிப்புத்தன்மை உணவு விஷத்திற்கு வழிவகுத்துவிடுமாம்.. உடலில் வெப்பத்தை உருவாக்கி, இறுதியில் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க செய்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

பிரியாணிக்கு வைக்கப்படும் தயிர் வெங்காயமும் கூட தவறுதான் என்கிறார்கள் டாக்டர்கள்.. காரணம், தயிர் குளிர்ச்சியை தரக்கூடியது, வெங்காயம் சூட்டை கிளப்பிவிடக்கூடியது.. எதிரெதிர் குணங்களை கொண்டதால், இவைகளை சேர்த்து சாப்பிடுவது அஜீரணத்தை தருமாம்..

Trending News

Latest News

You May Like