1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தயிர் உடன் மாம்பழத்தை சாப்பிட கூடாதாம்.!

1

. தயிர் உடன் மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஒருசில உணவுப் பொருட்களை சாப்பிடுவோம். அப்படி உடலை குளிர்ச்சியாக வைக்க சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் தான் தயிர். இத்தகைய தயிரை பலரும் கோடையில் அதிகம் சாப்பிடுவோம்.

மேலும் தயிரில் கால்சியம் அதிகம் உள்ளது. அதே சமயம் நல்ல பாக்டீரியாக்களும் வளமையாக நிறைந்துள்ளது. எனவே தயிரை சாப்பிடுவதால், எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்படும்.

ஆனால் அத்தகைய தயிரை இரவில் சாப்பிடக்கூடாது என்ற மிகவும் பிரபலமான விதிமுறை உள்ளது. ஆனால் இது அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. இருப்பினும் தயிரை சாப்பிடுவதில் ஒருசில விதிமுறைகள் உள்ளன.

இருமல் மற்றும் சளி
சளி மற்றும் இருமல் இருப்பவர்கள், தயிரை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. மேலும் இதனை ஆயுர்வேத மருத்துவமும் கூறுகிறது.அது என்னவெனில், தயிரை இரவில் தனியாக அப்படியே சாப்பிடுவதால் சளியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகவும். எனவே இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உங்களால் தயிர் சேர்க்காமல் இருக்க முடியாதெனில் மோர் குடிக்கலாம்.

சர்க்கரை சேர்க்கலாம்
தயிரை பகல் நேரத்தில் சாப்பிடும் போது, அத்துடன் சர்க்கரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்தும், அதுவே இரவில் சாப்பிடும் போது சர்க்கரை அல்லது மிளகுத் தூளை சேர்த்தும் சாப்பிடலாம். இதனால் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, வயிறும் குளிர்ச்சியடையும்.

தயிர் சாப்பிட சில அடிப்படை விதிமுறைகள்
உங்களுக்கு தயிர் மிகவும் பிடிக்குமானால், அதனை பயமின்றி எந்நேரமும் சாப்பிட ஒருசில டிப்ஸ் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி தயிரின் சுவையை ரசியுங்கள்.

* தயிரை சர்க்கரையுடன் கலந்து சாப்பிடலாம்.

* மோர் போன்று செய்து குடிக்கலாம்.

இரவிலும் தயிர் சாப்பிட சில அடிப்படை விதிமுறைகள்

* வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து பச்சடி போன்று செய்து சாப்பிடலாம்.

* தயிரை மோர் குழம்பாக சமைத்து சாதத்துடன் சாப்பிடலாம். 

* ஒருபோதும் தயிரை சுட வைத்து சாப்பிடக் கூடாது.

* உடலைப் புஷ்டிப்படுத்த விரும்புபவர்கள் வேக வைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.

* தோய்ந்து நிற்கும் தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் காணப்படும். இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு மூன்றும் கலந்த சிறந்த பானம். அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் காலை, மாலை கால் டம்ளர் குடித்தால் தொண்டை எரிச்சல், குமட்டல், களைப்பு, தலைச்சளி ஆகியவற்றை விரட்டும்.

* தயிரை துணியில் வடிகட்டி அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து குளிர வைத்து தயாரிப்பதுதான் ஸ்ரீகண்ட். இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

* பசியில்லாதவர்கள் புளிப்பு தலை காட்ட தொடங்கிய தயிரை சாப்பிட்டால் பசியை தூண்டும்.

* இரவில் குளர்ச்சியான தன்மையில் தயிரை சாப்பிட்டால் மூச்சிரைப்பு, ஜீரணக் குறைவு

தயிர் உடன் சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களை கலந்து சாப்பிட்டால், அது நம் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதை எளிதாக மறந்து விடுகின்றனர். தயிரையே, நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மாற்றக் கூடிய அந்த குறிப்பிட்ட உணவு வகைகள் என்னென்ன என்பதை நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்...

ஒரு கோப்பை தயிர் உடன், அரிந்த மாம்பழங்களை அதில் கலந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும் என்பதில் யாருக்கும் எந்த இடத்திலம் மாற்றுக்கருத்து இருக்கப்போவது இல்லை. வெங்காயத்தை போன்றே, மாம்பழமும், நமது உடலில் வெப்பத்தை அதிகரிக்கவல்லது ஆகும். தயிர் உடன் மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள், உடலின் செயல்பாடுகள் தடைபடுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

தயிர் என்பது புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப்பொருள் ஆகும். இது மாடுகளில் இருந்து பெறப்படுவதால், இது விலங்கு புரத வகையை சேர்ந்தது ஆகும். அதேபோல், மீனில் அதிகளவில் புரதம் உள்ளது. இதுவும் விலங்கு வகை புரதம் ஆகும். எப்போதும் ஒரு விலங்கு வகை புரதத்துடன் இன்னொரு விலங்கு வகை புரதத்தையோ அல்லது தாவர வகை புரதத்துடன், இன்னொரு தாவர வகை புரதத்தையோ சேர்த்து சாப்பிடக் கூடாது. இது நமது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். தயிர் உடன் மீன் சேர்த்து சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு ஏற்படுவதுடன், வயிறு தொடர்பான உபாதைகளும் ஏற்படக் கூடும்.

பால் மற்றும் தயிர் மாடுகளில் இருந்தே பெறப்படுவதால், இவை இரண்டும் விலங்கு வகை புரதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. பால் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, உப்பிசம் மற்றும் வாய்வுக் கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்பட காரணமாக அமைந்து விடும்.

தயிர் உடன் உளுந்தம் பருப்பினால் செய்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால், அது செரிமானத்தில் பிரச்சினையை உருவாக்கி இறுதியில், வயிற்று உப்பிசம், வாய்வுக் கோளாறு, வீக்கம், வயிற்றுப்போக்கு அல்லது பேதி போன்ற மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.

நெய் தடவப்பட்ட புரோட்டா, சால்னா என்றால் யாருக்குத்தான் இங்கு பிடிக்காது. அந்தளவுக்கு அதன் சுவை நம்மை எல்லாரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது. எண்ணெய் மிக்க உணவுகள் உடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து சாப்பிடும் போது, அது செரிமானத்தை தாமதப்படுத்துவது மட்டுமல்லாது, நம்மை விரைவில் சோர்வு அடைய செய்துவிடுகிறது.

இதன் காரணமாகவே, எண்ணெய் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட்ட பிறகு, லஸ்ஸி போன்ற பானங்களை குடிக்கும்போது, வெகுவிரைவில் உறக்கம் நம்மை தழுவிக்கொள்வதற்கான காரணமும் இதுவே ஆகும்.

Trending News

Latest News

You May Like