1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? மாம்பழம் சாப்பிட்டவுடன் இதை சாப்பிடாதீங்க... சாப்பிட்டால் உங்களுக்கு அதிக அளவில் முகப்பரு வரும்..!

1

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிடித்த பழம் என்றால் அது மாம்பழம் தான்.மாம்பழத்தில் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உலக அளவிலேயே இந்தியாவில் தான் அதிக வகை மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மாம்பழம் அதிகம் கிடைக்கும் கோடை கால சீசனில் எல்லோரது வீட்டிலும் மாம்பழம் கிலோ கணக்கில் இருக்கும்.

எல்லோருக்கும் பிடித்த  மாம்பழம் சாப்பிடும் போதோ அல்லது அதற்குப் பின்னரோ சில உணவுப் பொருட்களை மறந்தும் சாப்பிடக் கூடாது 

மாம்பழம் சாப்பிட்ட பிறகு பப்பாளியை சாப்பிட வேண்டாம்.  குமட்டல், வாந்தி மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படக் கூடும். 

மாம்பழம் சாப்பிட்ட பிறகு குளிர் பானங்களை தவிர்க்கவும். மாம்பழம் சாப்பிட்ட பிறகு குளிர்பானம் குடிப்பது உங்கள் செரிமானத்தை சீர்குலைக்கும்.

மாம்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.மாம்பழத்தை சாப்பிட்ட உடனே சிலர் அதிக அளவு தண்ணீரை குடிப்பர். இது தவறான செயலாகும். மாம்பழத்தை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது நம் உடலில் எதிர் மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். அதாவது வயிற்று வலி, அசிட்டிட்டி மற்றும் வயிறு உப்புசம் போன்றவை ஏற்பட காரணமாகும். மாம்பழம் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து வேண்டுமானால் தண்ணீர் குடிக்கலாம்.

மாம்பழத்துடன் அல்லது மாம்பழம் சாப்பிட்ட பின் மசாலா அல்லது காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.ஏன் என்றால் அப்படி சாப்பிடுவதன் மூலம் வயிற்று பிரச்சனைகள் ஏற்படும். மேலும், இந்த பழக்கம் இது உங்களின் சருமத்தில் எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக மாம்பழம் சாப்பிட்ட பின் காரமான உணவு சாப்பிட்டால் உங்களுக்கு அதிக அளவில் முகப்பரு ஏற்படும்.

மாம்பழத்துடன் தயிரை கலந்து டெசர்ட் ஆக சாப்பிட பலருக்கு பிடிக்கும். அதனுடைய சுவையும் நன்றாகத் தான் இருக்கும். ஆனால், மாம்பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது நம் உடலில் குளிர்ச்சி மற்றும் சூட்டை ஒரே நேரத்தில் உருவாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா...? ஆம், இப்படி மாம்பழத்தை சாப்பிட்டால் உங்கள் உடலில் நச்சு தேங்க வாய்ப்பு உள்ளது. இதனால் பல சரும பிரச்சனைகள் உருவாகும்

மாம்பழத்துக்குப் பின் பாகற்காயை சாப்பிட்டால் அது குமட்டல், வாந்தி மற்றும் மூச்சித் திணறலுக்கு வழி வகுக்கும்.


 

Trending News

Latest News

You May Like