1. Home
 2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..? தினமும் ஒரு நெல்லிக்காய் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா ?

1

நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி  மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.

நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன்  நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்.

நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கொட்டை நீக்கப்பட்ட  நெல்லிகனிகளை தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துப் பருகலாம். 
 
நரை முடி இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு பெரும் தொல்லை தரும் விஷயமாக ஆகிவிட்டது. உடல்ரீதியாக பிரச்னை எதையும் இது தராது என்றாலும்,  மனதளவில் சிறு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு ஒரு வழி உண்டு. நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு  எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக  மாறும்.
 
தினமும் ஓர் நெல்லிக்கனி எனச் சாப்பிட்டு எளிதாக சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றுள்ளனர். நாமும் நெல்லிக்கனியை நம் அன்றாட உணவில்  சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.

உங்களுக்கு சிறுநீரகக் கல் பிரச்சனை இருந்திருந்தால் அல்லது தற்போது இந்தப் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருந்தால், நீங்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். ஏனெனில் நெல்லிக்காயில் ஆக்சலேட் அதிகமாக உள்ளது, இது எளிதில் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாவதற்கு பங்களிக்கும்.

நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும், எனவே இரத்தச் சர்க்கரைக் குறைவு உள்ளவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். நீங்கள் இரத்தச் சர்க்கரைக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது இரத்தச் சர்க்கரைக் குறைவு அபாயத்தில் இருந்தால், நெளிக்காயை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.

நெல்லிக்காய் பொதுவாக கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அதன் பாதுகாப்பு குறித்து போதுமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது பாலூட்டும் பெண்ணாக இருந்தால், நெல்லிக்காயை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.

தினமும் ஒரு நெல்லிக்காய் ஏன் சாப்பிட வேண்டும்?

 • முடி நன்றாக வளர்வதற்கு.. 
 • ஞாபக சக்தி அதிகரிக்க...
 • ரத்த சோகை நீங்க.. 
 • ரத்த அழுத்தத்தை சீராக வைக்க....
 • குறிப்பாக உடல் எடையை குறைக்க....
 • இன்சுலின் அளவை அதிகப்படுத்தி சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த...
 • சருமப் பிரச்னைகள் நீங்கி முகம் பொலிவு பெற...
 • அல்சரைக் குணப்படுத்த....
 • புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க...
 • மலச்சிக்கல் பிரச்னை தீர...
 • கண் பார்வை தெளிவாக கிடைக்க...
 • இதயம் மற்றும் கல்லீரல் சீராக இயங்க...
 • ரத்த ஓட்டம் சீராக.. 

தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடுங்கள்...
மற்ற பழங்களைவிட நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. உலர்ந்த நெல்லிக்காய் அல்லது தேனில் ஊற வைத்த நெல்லிக்காயும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். .உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெல்லிக்காயை ஜூஸ் முறையில் எடுத்துக்கொள்வது விரைவான பலனை அளிக்கும்.

Trending News

Latest News

You May Like