1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? மீனை தினமும் சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன தெரியுமா?

1

மீன்களை தவறாமல் சாப்பிடுபவர்களுக்கு, கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனைகள், வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயங்கள் குறைகின்றன.. நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன..

புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.. இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள்தான், இருதயம், மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது.

ஒமேகா-3 அமிலத்தை அதிகமாக உட்கொள்ளும்போது, மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறைகிறதாம். அதுமட்டுமல்ல, கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒமேகா 3 உள்ளது..

தினமும் மீன் சாப்பிடுவதனால் ரத்தக்குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறதாம்.. வைட்டமின் D சத்துக்களும் நிறைவாக கிடைக்கிறது. எலும்புகளும், பற்களும் வலுவாக வைத்து கொள்ள முடியும்.. கெட்ட கொழுப்புகளை குறைப்பதுடன், கெட்ட கொழுப்புக்கள் உடலில் சேர்வதையும் இந்த மீன்கள் தடுக்கின்றன..

மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, சர்க்கரை நோய், முடக்குவாதம் போன்ற நோய்களின் தாக்கம் மிகக்குறைவாகவே காணப்படுகிறது.. உணவில் மீன்களை அதிகமாக சேர்த்து வந்தால், முடக்குவாதத்தில் ஏற்படும் வீக்கத்தையும், அதன் வலியையும் வெகுவாக குறைக்கலாம்.. சருமத்துக்கும் கசவமாக திகழ்கிறது. தலைமுடி வளர்ச்சி பெற வேண்டுமானால், சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களை தேர்ந்தெடுக்கலாம்.. பொதுவாக, 8 வார காலத்தில், மீன்களை மட்டுமே சாப்பிட்டவர்கள் எடை குறைந்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன..

மீன் எண்ணெய்யை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு குறையும். இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்.

மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருகிறது. மன அழுத்த நோய் உருவாவதற்கு பல்வேறு காரணிகள் இருப்பதால், கூடுதலான மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல்  தடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சூரை மீன் : சூரை மீன் அல்லது டூனா மீனில் உள்ள அதிக அளவு ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் இதய தமனிகளுக்கு சேரக்கூடிய ஒமேகா - 6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் எல்டிஎல் கொழுப்பின் அளவை குறைக்க உதவும்.

டிரவுட் மீன் :  டிரவுட் மீன் ஒமேகா - 3களின் வளமான மூலமாகும். இது நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது.

கானாங்கெளுத்தி மீன் : கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா - 3 அமிலம் நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

மத்தி மீன்கள் : மத்தி மீன்கள் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். மேலும் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது.

வாள்மீன் : வாள்மீனில் காணப்படும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதகிறது.

Trending News

Latest News

You May Like