1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? மழையில் நனையும் பழக்கம் உள்ளதா ? அப்போ உங்கள் முடியை எப்படி பராமரிக்க வேண்டும்..?

1

நாம் மழையை விரும்பும் அளவிற்கு மழையில் நனையும் போது ஏற்படும் சேதத்தால் மழையை வெறுக்கவும் செய்கிறோம். மழையில் நனையும் போது முதலில் உங்கள் முடி சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே மழையில் நனைந்த பிறகு சில விஷயங்களை பின்பற்றுவதால் உங்கள் முடி சேதம் அடைவதில் இருந்து பாதுகாக்கலாம்.

மழையில் நனைந்து வீட்டிற்கு வந்ததும் முதலில் நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசுங்கள். மலையில் நனைவதன் மூலம் முடியில் தேங்கி உள்ள நச்சுக்கள் மற்றும் மாசுக்களை அகற்றலாம்.

நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சிறிது வேப்ப இலைகளை போட்டு ஊற வைத்து பின்னர் அந்த நீரில் உங்கள் தலை முடியை அலசுங்கள். வேப்ப இலைகள் பாக்டீரியாக்களை அழிக்க உதவும். மேலும் பூஞ்சைகளை எதிர்க்கும் பண்புகளையும் கொண்டு உள்ளது. மேலும் வேப்ப இலைகள் உச்சந்தலையில் உள்ள பொடுகு மற்றும் தொற்றுக்களை அகற்ற உதவுகிறது. வேப்ப இலைகள் கிடைக்கவிட்டால் நீங்கள் வேப்ப இலைகளை மூலப்பொருளாகக் கொண்ட ஒரு ஷாம்பூவை பயன்படுத்தலாம்.

மழைக்காலம் வந்து விட்டால் உங்கள் தலைமுடி ஈரப்பதமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். எனவே கண்டிஷ்னர் பயன் படுத்துவதில் கவனம் தேவை. இயற்கையாக சுருண்ட முடி கொண்ட பெண்கள் சிலிகான் கண்டிஷ்னர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ஆன்டி-ஹுமெக்டன்ட் கண்டிஷ்னரைப் பயன்படுத்துங்கள். இயற்கையான கண்டிஷ்னர் பயன்படுத்த விரும்புவார்கள். வீட்டில் இருக்கும் முட்டை மற்றும் தயிர் கலந்து உங்கள் முடியில் தேயுங்கள். இது உங்கள் முடிக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கும். அப்படியில்லையெனில் நீங்கள் ஆலிவ் மற்றும் முட்டையைப் பயன்படுத்தி உங்கள் முடியில் மாஸ்க் போல் போட்டுக் கொள்ளுங்கள். இது உங்கள் முடிக்கு கண்டிஷ்னர் பயன்படுத்தியதை போல் தோற்றத்தை தரும்.

மழைக்காலங்களில் உங்கள் முடியை ஈரமான நிலையில் விட்டுவிடாதிர்கள். ஈரப்பதமான நிலையில் உங்கள் தலைமுடியில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும். மேலும் பல உச்சந்தலை நோய்களும் உண்டாக வழிவகுக்கும். உங்கள் முடியை முழுமையாக உலர வைப்பது முக்கியம். உச்சந்தலையில் உள்ள முடியை மெதுவாகத் துடைப்பது அவசியம். நேரம் இருப்பவர்கள் முடியை இயற்கையான முறையில் உலர வைக்கலாம். நேரம் இல்லாதவர்கள் உங்கள் முடியை அடியில் இருந்து துடைப்பது நல்லது. எப்போதும் முடியை உலர வைக்க டிரையரை பயன்படுத்தும் போது குறைந்த அளவு வெப்பத்துடன் உபயோகப்படுத்துங்கள்.

உங்கள் முடியை போதுமான அளவில் வெட்டிக் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் முடியின் நுனிப்பகுதியை சிறிதளவு வெட்டி கொள்வது நல்லது. இது உங்கள் முடியின் நுனிப் பகுதியில் இருக்கும் பூச்சிவெட்டுகளை அகற்ற உதவும். மேலும், உங்கள் முடியை சரியான உயரத்திலும் வடிவத்திலும் வைத்து கொள்ளுங்கள். மழைக்காலத்தில் நீங்கள் குறைந்த அளவில் முடி வெட்டிக் கொள்வது நல்லது. ஏனெனில் நீளமான முடியானது காய்வதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். பெண்கள் லேயர் கட் பண்ணிக் கொள்வது உங்கள் முடி சீக்கிரம் காய உதவியாக இருக்கும்.

Trending News

Latest News

You May Like