இது தெரியுமா ? ஆட்டு இறைச்சி சமைக்கும்போது பப்பாளிக்காயை துண்டுகளாக நறுக்கி...
பப்பாளி பழம் தாய்ப்பால் சுரக்கும் ஆற்றல் கொண்டது . மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகிவிடும். கர்ப்பகாலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது கருக்கலைப்பை எற்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது. செரிமான மாத்திரைகள் இந்த பப்பாளி பழத்தில் இருந்து தான் தயாரிக்க பயன்படுகிறது .
பப்பாளி சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது .பப்பாளி விதையில் உள்ள ஆன்டி ஆக்சிஜன் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது. பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்தை குறிக்கும்.
பப்பாளி பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பப்பாளி பழத்தின் கனிந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதை தடை செய்யலாம். பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்துக்கள் உள்ளதால் கண்களில் எற்படும் பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது. இந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் சருமத்தில் எற்படும் சுருக்கங்களை தவிர்க்கலாம்.
சாப்பிடும் முறைகள்:
பப்பாளிக்காயை பொறியல் செய்து உண்ணலாம்.
அல்லது சாறு போல் அரைத்தும் அருந்தலாம்.
இப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து அதன் மீது சீரகத்தூள், தேன், சிறதளவு எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
இப்பழத்துண்டுகிளின் மீது பனங்கற்கண்டுத் தூள் தூவியும் சாப்பிடலாம்.
சப்பாத்தி, தோசை போன்றவற்றிற்குத் தொட்டுக் கொள்வதற்கு ஜாம் போல பயன் படுத்தலாம்.
இரவு உணவில் பப்பாளிப் பழத்தினைக் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அசைவப்பிரியர்களுக்கு ஓர் செய்தி:
ஆட்டு இறைச்சி சமைக்கும்போது பப்பாளிக்காயை துண்டுகளாக நறுக்கி சிறிதளவு சேர்த்து வேகவைத்தால் இறைச்சி மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
பலன்கள்:
- பப்பாளிப்பழம் செரிமான நோய்களை குணப்படுத்துவதோடு மலச்சிக்கல்களைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது.
- இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றும், இரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும்.
- நமது உடலில் காயம்பட்டு வெளியேறுகின்ற இரத்தமானது உடனடியாக உறைவதற்குத் தேவையான என்ஸைம்கள் இப்பழத்தில் அடங்கியுள்ளன.
- கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப் பழமே சிறந்த உணவாகும்.
- பப்பாளிப் பழத்தின் விட்டமின் ‘ ஏ ‘ மிகுதியாக அடங்கியுள்ளது.
- பப்பாளிக்காயை சாறு அரைத்துக் குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெறியேறும்.
- தினசரி பப்பாளியை உண்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு இளமைப்பொலிவோடு வாழலாம்.