1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு வெள்ளரிக்காய் ஒரு சிறந்த மருந்து..!

1

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.வெள்ளரிக்காய் உண்ணுவதால், உடலில் ஏற்பட்டுள்ள வெப்பத்திற்கு நிவாரணம் கிடைக்கும். அதிலும் சருமத்தில் வெள்ளரிக்காயை சருமத்தில் தடவினால், சூரிய கதிர்களில் இருந்து அது உங்களை காக்கும்

வெள்ளரிக்காயில் உள்ள நீர், உடலில் இருக்கும் கழிவை நீக்கும் ஒரு துடைப்பமாக விளங்குகிறது. அதனை சீரான முறையில் சாப்பிட்டால், சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை கரையச் செய்யும்.

வெள்ளரிக்காயை நறுக்கி, கண்ணைக் சுற்றி கருவளையம் உள்ள இடத்தில் வைத்து வந்தால் விரைவில் அது மறையும். மேலும் புகை பிடிப்பது, மதுபானங்கள் குடிப்பது ஆகியவற்றால் உடலில் அதிகரிக்கும் தீமையைக் கட்டுபடுத்துவதில் வெள்ளரிக்கு தனி இடம் உண்டு...

புகை பிடிப்பது, மதுபானங்கள் குடிப்பது ஆகியவற்றால் உடலில் அதிகரிக்கும் தீமையைக் கட்டுபடுத்துவதில் வெள்ளரிக்கு தனி இடம் உண்டு.

நமது சருமம் பொலிவுடன் திகழவும் வெள்ளரிக்காய் உதவுகிறது.வெள்ளரிக்காயில் அதிக அளவில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சிலிகான் உள்ளது. அதனால் தான் ஸ்பா மற்றும் அழகு சாதன  நிறுவனங்கள் பெரும்பாலும் வெள்ளரிக்காயை பயன்படுத்துகின்றனர்.

வெள்ளரிக்காயை நன்கு அரைத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் ஓட்ஸ், தயிர் மற்றும் தேன் விட்டு நன்கு கலக்கவும். பின் அதை முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்தால் உங்கள் சருமம் பொலிவு பெறுவது நிச்சயம்.

இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் ஒன்று வெள்ளரிக்காய் சாற்றில் உள்ளது. அதனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது. உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை  சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதனால் தான்  உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் என இரண்டிற்குமே வெள்ளரிக்காய் உபயோகப்படுகிறது.

வெள்ளரிக்காயில் அதிக அளவில் சிலிகா உள்ளதால், தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக நிற்கும். அதிலும் இதனை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து பருகும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம்  கிடைக்கும்.

மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. 

நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.

Trending News

Latest News

You May Like