1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? கோடை காலத்தில் மறந்தும்கூட சேர்க்கக் கூடாதது நண்டு..!

1

எந்தெந்தக் காலச்சூழலில் என்னென்ன உணவைச் சாப்பிடலாம் என்று வகைப்படுத்தியிருந்தார்கள் நம் முன்னோர். ஆனால், இன்றைக்கு நாம் நம் பாரம்பர்யத்தை மறந்துவிட்டோம்.

வியாழக்கிழமைகளில் பயறுக்குழம்பு, வெள்ளிக்கிழமைகளில் சாம்பார் வைக்க வேண்டும் என்று சொல்லிவைத்திருந்தார்கள். அதைக் காலங்காலமாக பின்பற்றி வருகிறவர்களும் உண்டு. செரிமானச் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே தேங்காய்ப்பாலில் செய்யப்பட்ட சொதியும், இஞ்சித் துவையலும் செய்து சாப்பிடுவதும் வழக்கத்திலிருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, மரபார்ந்த பழக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு ஞாயிற்றுக்கிழமை என்றால் அசைவம் என்பதை மட்டும் கட்டாயமாக்கிவிட்டோம். அசைவமும் நல்ல உணவுதான். என்றாலும், `கோடைகாலத்தில் அசைவம் சாப்பிடலாமா?’ என்று கேட்டால், `வேண்டாம்’ என்பதுதான் நல்ல பதிலாக இருக்கும். 

அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் டிரைகிளைசரைடுகளும் (Triglycerides) `எல்.டி.எல்’ எனப்படும் கெட்டக் கொழுப்பின் அளவும் அதிகரித்து இதயநோய் வருவதற்கான சூழலை ஏற்படுத்தும். கொழுப்பு நிறைந்த உணவுகள், குடல் இயக்கத்தை மந்தப்படுத்தும் வாய்ப்பும் உண்டு. 

பிராய்லர் கோழிகளை கோடைகாலத்தில் மட்டுமல்ல...  எந்தக் காலத்திலும் சாப்பிடக் கூடாது. நாட்டுக்கோழி சாப்பிடலாம். ஆனால், அதையும் கோடையில் தவிர்ப்பதே சிறந்தது. கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும்; வெப்பத்தில் நம் உடல் தகித்துக்கொண்டிருக்க, அந்த நேரத்தில் சூடு நிறைந்த கோழிக்கறியைச் சாப்பிட்டால் செரிமானமாவதில் சிக்கல் ஏற்படும். வயிற்றுவலி, கழிச்சல், மூலம், வேறு சில  வயிற்று உபாதைகளும் ஏற்படும்.

 `கோழிக்கறி உடலில் சூட்டை உண்டாக்கும் குணமுடையது. அதற்கு பதிலாக குளிர்ச்சித் தன்மையுள்ள ஆட்டுக்கறியைச் சாப்பிடலாம்’ என்று சொன்னால் அதுவும் தவறானதே. ஏனென்றால் வெயில் காலத்தில் ஏற்படும் செரிமானக் கோளாறால் மலச்சிக்கலும் வயிற்று உபாதைகளும் ஏற்படும். அசைவம் சாப்பிட்டுத்தானாக வேண்டும், அது இல்லாமல் முடியாது என்பவர்கள் மீன் குழம்புவைத்து, குறைந்த அளவில் சாப்பிடலாம்.

அதற்காக மீன் மசாலா, பொரித்த மீனெல்லாம் சாப்பிடக் கூடாது. கோடை காலத்தில் மறந்தும்கூட சேர்க்கக் கூடாதது நண்டு. அது உடலில் எரிச்சலை ஏற்படுத்தும்; அலர்ஜி உண்டாகவும் அதிக வாய்ப்புண்டு. ஃபாஸ்ட்ஃபுட், பீட்சா, பர்கர், சிப்ஸ், சிக்கன் ஃப்ரை, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளையும் வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது

Trending News

Latest News

You May Like